மீண்டும் வலுவாக வாருங்கள் NEET/JEE- 2025ல் ஆகாஷ் ரிப்பீட்டர் பாடத்துடன்

நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளில் மறுதேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆகாஷ் கல்வி நிறுவனம் ரிப்பீடர் தேர்வுகள் மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்துகிறது.

மீண்டும் ஒரு வருடம் உங்களை அர்ப்பணிக்கத் தயாரானால் உங்களின் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான கனவு நனவாவது சாத்தியமே. நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற தேர்வுகளில் வெற்றி காண்பது என்பது எளிதான செயலன்று. அதில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான மாணவர்களில் ஒரு சிலர் மட்டுமே முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுகின்றனர். நுழைவுத் தேர்வுகளை பொறுத்தவரை விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காதபோது மாற்று வாய்ப்புகளைத் தேடி, அடுத்த ஆண்டு நுழைவுத் தேர்வுகளுக்குத் தங்களை தயார் செய்து காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் நீட் தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களும், மறுதேர்வு எழுத திட்டமிடும் மாணவர்களும் ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் ரிப்பீட்டர் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். அத்துடன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு நுழைவுத் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம்.

2025-ம் ஆண்டு நீட் மற்றும் ஜே.இ.இ ரிப்பீட்டர் தேர்வுகள் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆகாஷ் கல்வி நிறுவனம் நடத்தும் பயிற்சி வகுப்புகளின் சிறப்பம்சங்கள்:-

ஆகாஷின் ரிப்பீட்டர் பயிற்சி வகுப்புகள் மாணவர்கள் அதிக அளவு மதிப்பெண்கள் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் கனவு காணும் கல்லூரிகளில் படிக்க வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் ரிப்பீட்டர் வகுப்பறை மாணவர் சூரியான்ஷ்.கே.ஆரியன் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் இரண்டாவது முயற்சியில் 705 மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றுள்ளார். அவரது முதல் முயற்சியில் 592 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இப்போது அவர் புகழ்பெற்ற போபால் எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தில் படித்து வருகிறார்.

அஞ்சலி என்ற மாணவி 2022-ம் ஆண்டு நீட் தேர்வில் முதல் முயற்சியாகத் தேர்வு எழுதி 622 மதிப்பெண்கள் பெற்றார். அவர் ஆகாஷ் கல்வி மையத்தின் ரிப்பீட்டர் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு நீட் 2023 தகுதித் தேர்வில் 706  மதிப்பெண்கள் பெற்று,  அந்தமான் மற்றும்  நிக்கோபார்  தீவுகளுக்கான  நீட் தேர்வில் முன்னணி இடத்தில் உள்ளார். இப்போது அவர் டெல்லியில் உள்ள எம்.ஏ.எம்.சி-யில் படித்து வருகிறார்.

ஆகாஷ் கல்வி மையத்தின் ரிப்பீட்டர் தேர்வுகளின் வெற்றிக் கதைகள் இப்படி ஏராளம். அதன் தீவிரப் பயிற்சிகள் பற்றி குறிப்பிடுவதன் நோக்கம், மாணவர்களின் விலைமதிப்பற்ற நேரத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி தேர்வு வெற்றியை உறுதியாக்குவதுதான்.

தேசிய அளவில் சிறந்த ஆசிரியர் ஒருவரால் 35 ஆண்டுகளாக நடத்தப்படும் பாரம்பரியம் கொண்ட ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் சிறந்த தகுதியும், அனுபவமும் பெற்றவர்கள். அவர்களது பயிற்சி முறைகள் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மாறி வரும் மாணவர்களது கல்வித் தேவைகளுக்குப் பொருத்தமாக உள்ளன.

சிறந்த நிபுணர்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட உயர்தரமான பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டங்கள் மாணவர்களுடைய அனைத்து வித தேவைகளுக்கும், கேள்விகளுக்கும் பொருத்தமான வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் மாணவர்கள் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை எளிதாக சந்தித்து வெற்றி பெறும் வகையில் அவர்களுடைய முழுமையான புரிதல் உறுதி செய்யப்படுகிறது. அதற்காக பல்வேறு வகை வினாத்தாள்கள், எடுத்துக்காட்டுகள், விளக்கப்படங்கள் ஆகியவை அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அவை அனைத்தும் ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் வல்லுநர்கள் மூலம் மிக கவனமாகவும் நுணுக்கமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய நுழைவுத் தேர்வுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் விதிகளின் தேவைகளுக்கு ஏற்ப ஆகாஷ் கல்வி நிறுவனப் பயிற்சி வகுப்புகள் கடுமையான மதிப்பாய்வு மற்றும் புதுப்பித்தல் முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் தங்களது தேர்வுகளுக்குத் தயாராகும் திறனைப் பெறுகிறார்கள்.

ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு தீவிரப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மதிப்பீட்டு அட்டவணை ஆகியவற்றைக் கண்டு அவர்களுடைய தேர்வுக்கான தயாரிப்பு  முறை  கண்காணிக்கப்படுகிறது. அதன்மூலம் மாணவர்களுடைய பலவீனங்கள் சீர் செய்யப்ட்டு வெற்றியை நோக்கி அவர்கள் செல்ல பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இதுகுறித்து போபாலில் படித்த ஆகாஷ் ரிப்பீட்டர் வகுப்பறை மாணவரான சூரியான்ஷ்.கே.ஆரியன் குறிப்பிடும்போது, “ஒவ்வொரு நாளும் என் பயிற்சி முறைகளை நான் தொடர்ந்து பரிசோதனை செய்து வந்தேன். அதன் மூலம் என் பலம் மற்றும் பலவீனம் எதுவென அடையாளம் கண்டு தேர்வில் வெற்றி பெற்றேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை மீண்டும் எழுத உள்ள மாணவர்களுக்கு வெற்றி அடைய உதவுவதுடன் பொருளாதார ரீதியாகவும் ஆகாஷ் உதவி செய்கிறது. அந்த வகையில் ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் Instant Admission Cum Scholarship Test (iACST) என்ற கல்வி உதவித் திட்டத்தின் கீழ் 90 சதவிகிதம் வரை சலுகை பெற்று மாணவர்கள் தங்களுடைய ரிப்பீட்டர் தேர்வுகளில் அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நுழைவுத் தேர்வை சந்திக்கும்போது பயன்பெறலாம்.

எதிர்வரும் 2025-ம் ஆண்டு நீட் அல்லது ஜே.இ.இ தேர்வுகளில் மீண்டும் பங்கேற்று வெற்றி பெற்று மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் இணைந்து படிக்க விரும்பும் மாணவர்கள் தங்களுக்கு மிகச்சரியான வழிகாட்டியைத் தேர்வு செய்வது மிக அவசியம். அந்த வகையில் ஆகாஷ் நிறுவனத்தின் ரிப்பீட்டர் பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் சேர்ந்து தங்களுடைய வெற்றிப் பயணத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப தற்போது மாணவர் சேர்க்கை ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் நடத்தப்படுவதுடன் 90 சதவிகிதம் கல்வி உதவித் தொகையும் மாணவர்களுடைய தகுதிக்கேற்ப வழங்கப்படுகிறது. ”ஆகாஷின் இந்த வெற்றிப் பயணத்தில் சேர்ந்து வெற்றி வாய்ப்பை பெற்று மாணவர்கள் பயனடைய வேண்டும்” என்கிறார்கள் ஆகாஷ் நிறுவனத்தினர்.

https://iacst.aakash.ac.in/iacst-medical-engineering-repeater-courses?utm_source=article&utm_medium=Vikatan&utm_campaign=Repeater2425

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.