ஹிங்குராக்கொட விமான நிலையம் சர்வதேச சிவில் விமான சேவைகளின் தரநியமங்களுக்கமைய அபிவிருத்தி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஹிங்குராக்கொட விமான நிலையத்திற்கான பிரதான திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் அதற்குரிய ஏனைய பணிகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவின் விதந்துரைகளுக்கமைய ஹிங்குராக்கொட விமான நிலையத்தை முழுமையான விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக நேற்று (24.06.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீரமானம் பின்வருமாறு:
01. ஹிங்குராக்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல்
தற்போது விமானப் படையினரால் முகாமைத்துவப்படுத்தப்பட்டு வரும் ஹிங்குராக்கொட விமான நிலையம் சர்வதேச சிவில் விமான சேவைகளின் தரநியமங்களுக்கமைய அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த விமான நிலையத்திற்கான பிரதான திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் அதற்குரிய ஏனைய பணிகளுக்காக இலங்கை விமானப்படை, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை, வரையறுக்கப்பட்ட விமானநிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் விதந்துரைகளுக்கமைய ஹிங்குராக்கொட விமான நிலையத்தை முழுமையான விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களும், துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.