ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `இந்தியன் -2′.
1996-ம் ஆண்டு வெளியான முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதையொட்டி ஷங்கர், கமல், சித்தார்த், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
இதில் பேசிய இயக்குநர் ஷங்கர், “என்னுடைய படங்கள் இப்படி நடந்தா எப்படி இருக்குங்குற அடிப்படைலதான் இருக்கும். அதே மாதிரிதான் இப்போ இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படத்தோட கதை. முதல் பாகம் தமிழகத்துக்குள்ள இருக்கிற மாதிரி இருக்கும். இரண்டாம் பாகத்துல இந்தியன் தாத்தா மற்ற மாநிலங்களுக்கும் போறார். முதல் பாகத்துல 40 நாள்தான் பிராஸ்தெடிக் மேக்கப் போட்டோம். ஆனா, இரண்டாம் பாகத்துக்கு 70 நாள் பிராஸ்தெடிக் மேக்கப் போட்டோம்.
ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி வந்துட்டு, ஷூட்டிங் முடிஞ்சு தாமதமாகதான் கமல் சார் போவாரு. அந்த அளவுக்கு அவருக்கு மேக்கப் போடுறதுக்கு ரொம்ப டைம் எடுக்கும். ஷூட்டிங் நேரத்துல ஒவ்வொரு நாளும் இந்தியன் தாத்தா நம்மகூட இருக்காருன்னுதான் தோணும். ஒரு சீன்ல நான்கு நாள் ரோப்லயே தொங்கி நடிச்சாரு. அந்தச் சமயத்துல அவர் இந்தியன் தாத்தா மேக்கப் வேற போட்டுருப்பாரு. அதுமட்டுமில்லாம, அப்போ பஞ்சாபி மொழியையும் பேசி நடிச்சுருப்பாரு. சேலஞ்சிங்காக எது கொடுத்தாலும் பண்ணிடுவாரு. நான் எதிர்பார்த்தைவிட அனிருத் சிறப்பாக மியூசிக் கொடுத்திருக்காரு” என்று பேசியிருக்கிறார்.
பத்திரிகையாளர்களின் கேள்விகள்
கேள்வி: இந்தியன் 2-ல சுகன்யா கதாபாத்திரம் வருமா?
ஷங்கர்: இந்தியன் 2-ல சுகன்யா கதாபாத்திரம் தேவைப்படவில்லை.
கேள்வி: எல்லா மாநிலத்துக்கும் கதை விரியும்னு சொன்னீங்க… குஜராத் பற்றி என்ன விஷயம் பேசியிருக்கீங்க?
ஷங்கர்: படம் பாருங்க…