சுற்றுலாக் கவர்ச்சி மற்றும் ஊக்குவிக்கும் இடமான தெம்மோதரை ஒன்பது வளைவு பாலத்தில் காணப்பட்ட குளவிக் கூடுகளை பாதுகாப்பாக அகற்றும் பணிகள் அண்மையில் இடம்பெற்றன.
இக்குளவிக் கூடுகளை பாதுகாப்பாக அகற்றுதல் மற்றும் இடைக்கால தீர்வாகவும், பாதுகாப்பு வேலி அமைத்தல் என்பன தொண்டுச் சேவையாக கண்டி பிங்கு நண்பர்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய கலாசார நிலையத்தின் மொனராகலை மாவட்ட வேலை திட்டத்தின் கீழ் தொல்பொருளியல் மற்றும் புகையிரத திணைக்களம் என்பவற்றின் மேற்பார்வையின் கீழ் எல்ல பிரதேச செயலகம் மற்றும் எல்ல பொலீஸ் என்பது இணைந்து இச்செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.