Gaming Laptop Discount In Amazon: லேப்டாப்களின் பயன்பாடு என்பது இந்த காலகட்டத்தில் அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்போன்கள் எப்படி அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் சென்று சேர்ந்துள்ளதோ, அதேபோல்தான் லேப்டாப்களும் மாணவர்கள், இளைஞர்கள், பணியில் இருப்போர், வயதானவர்கள் என அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்படும் முக்கிய சாதனமாக உருமாறியிருக்கிறது.
குறிப்பாக லேப்டாப் கொரோனா காலகட்டத்திற்கு பின் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் கல்வி, வீட்டிலிருந்த வேலை போன்றவை தற்போது அதிகமாகிவிட்டதால், லேப்டாப்பின் தேவையும் அதிகரித்திருக்கிறது. அதேபோல், லேப்டாப் பயன்பாடு என்பது இவற்றுக்கும் மட்டுமின்றி கேமிங் தளத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், கேமிங் லேப்டாப்கள் சில தற்போது அமேசானில் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கிறது.
அமேசான் இந்தியா நிறுவனத்தால் நடத்தப்படும் Amazon Grand Gaming Days Sale என்ற தள்ளுபடி விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 24ஆம் தேதி இந்த விற்பனை தொடங்கிய நிலையில், வரும் ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி விற்பனையில்தான் பல கேமிங் லேப்டாப்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. எனவே, இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு வழக்கத்தை விட குறைவான விலையில் கேமிங் லேப்டாப்களை ஒருவர் வாங்கலாம். இந்நிலையில், இந்த விற்பனையில் சக்திவாய்ந்த பிராஸஸர் மற்றும் பேட்டரி உடன் வரும் மூன்று கேமிங் லேப்டாப்களை இங்கு காணலாம்.
Acer ALG
இந்த லேப்டாப்பின் விலை ரூ. 56 ஆயிரத்து 990 ஆகும். இதனை நீங்கள் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ. 2000 தள்ளுபடி கிடைக்கும். மேலும், எக்ஸ்சேஞ் ஆப்பரில் நீங்கள் இதனை வாங்கினால் ரூ.10 ஆயிரத்து 700 தள்ளுபடி கிடைக்கும். தொடர்ந்து, மாதாமாதம் இதற்கு தவணை செலுத்தியும் வாங்கலாம். குறைந்தபட்சம் ரூ.2,763 மாதத்தவணை செலுத்தியும் இந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கலாம்.
இந்த லேப்டாப் 12th Gen இன்டெல் கோர் i5-12450H டுவல் கோர் பிராஸஸர் உடன் வருகிறது. இதில் 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இந்த லேப்டாப்பில் 16ஜிபி RAM மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
HP Victus
இந்த லேப்டாப்பின் விலை ரூ.78,990 ஆகும். இதனை நீங்கள் ஹெச்டிஎப்சி வங்கியின் கார்டு மூலம் வாங்கினால் ரூ.4000 தள்ளுபடி கிடைக்கும். இதனை எக்ஸ்சேஞ் ஆப்பரில் வாங்கினால் ரூ.10,700 வரை தள்ளுபடி கிடைக்கும்.
இந்த லேப்டாப் 13th Gen இன்டெல் கோர் i5 பிராஸஸருடன் வருகிறது. மேலும், இதன் கிராபகிஸ் கார்டு 6ஜிபி NVIDIA GeForce RTX 4050 GPU ஆகும். தொடர்ந்து, இதில் 16ஜிபி RAM மற்றும் 512ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வரும். இந்த லேப்டாப் 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளே உடன் வருகிறது. 144Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. இந்த லேப்டாப்பில் GTA V மற்றும் Call Of Duty ஆகியவற்றை எளிமையாக விளையாடலாம்.
ASUS TUF F15
இந்த லேப்டாப்பின் விலை ரூ.57 ஆயிரத்து 990 ஆகும். இதனை நீங்கள் ஹெச்டிஎப்சி வங்கியின் கார்டு மூலம் வாங்கினால் ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும். மாதத் தவணையாக ரூ.2,811 செலுத்தி வாங்கலாம். எக்ஸ்சேஞ் ஆப்பரில் ரூ.10 ஆயிரத்து 700 வரை தள்ளுபடியில் கிடைக்கும்.
இந்த லேப்டாப்பில் FHD டிஸ்ப்ளே உள்ளது. இதில் இன்டல் கோர் i5-11400H பிராஸஸர் உடன் வருகிறது. மேலும் இதில் 16ஜிபி RAM மற்றும் 512ஜிபி இன்டர்நல் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதில் 48 WHrs பேட்டரி உள்ளது. அதாவது இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் தொடர்ந்து 6 மணிநேரம் வரை பயன்படுத்தலாம். தடையில்லாமல் கேம் விளையாடிக்கொண்டே இருக்கலாம்.
மேலும் படிக்க | ஜியோ : ரூ.49க்கு ரீச்சார்ஜ் பண்ணுங்க, அன்லிமிடெட் டேட்டா, வீடியோ பார்த்து மகிழுங்கள்