ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மக்களுக்கு தெரிவிக்கவுள்ளார். அதனை இரவு 8.00 மணிக்கு ஊடகங்கள் ஊடாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.