நாடு வீழ்ச்சியடையும் போது மக்கள் இறப்பதைத் தடுக்கும் புரட்சிகரமான சவாலை ஏற்றுக்கொண்டவர் ஜனாதிபதி ரணில் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயக்கார கடந்த (23) அம்பாறையில் இடம்பெற்ற ‘ஸ்மார்ட் யூத் கிளப்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள இளைஞர்களின் இலக்குகள் தவறான திசையில் திசைதிருப்பப்பட்டது இதனால் நாடு வீழ்ச்சியடைந்ததுடன், இளைஞர்கள் தமது ஆற்றலை சரியான திசையில் செலுத்தவில்லை என அமைச்சர் கூறினார்.
நம் நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்தது மக்கள் வரிசையில் நின்று இறந்தனர். மக்கள் இறப்பதைத் தடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அந்த சவாலை ஏற்றுக்கொண்டது.
மக்களை நேசிக்காதவர்கள், மக்கள் இறப்பதைப் பார்த்தவர்கள், மக்கள் இறந்தால் நாட்டைக் காப்போம், புலம்பெயர் தொழிலாளிகளிடம் நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று சொன்னவர்கள் உண்மையில் புரட்சியாளர்களா? இவர்கள் உண்மையில் மக்களை நேசிக்கிறீர்களா?
2015 ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவினால் நமது நாட்டை வெறுப்பேற்று நாட்டு மக்களிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. எனவே இது நடைபெற்று இருக்கா விட்டால் இன்று நாம் இப்படி மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியாது. அன்று இது ஒரு சிறிய முடிவாக இருந்தாலும், இன்று நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும் பெரிய முடிவு. நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் சிவப்பு சகோதரர்கள் முன்னோக்கிசெல்வத்தைத் தடுத்தார்கள் அவ்வாறே தற்போது எலோன் மஸ்க்கை ஒரு பொருளாதார கொலையாளி என்று அழைக்கிறார்கள். இன்று நாம் பழமை வரலாற்றிலிருந்து எதிர்காலத்திற்கு வந்துள்ளோம், எலோன் மஸ்க் போன்று இளைஞர்களை திறமைமிக்க சிறந்த தலைவர்களாக வலுப்படுத்த கிராமத்திலிருந்து தொழில்முறை பயிற்சிகளை வழங்குகிறோம். இந்த பொருளாதாரக் கொலைகாரர்கள் கூறுவது போல் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்வதற்காக அல்ல என்றும் அமைச்சர் கூறினார்