யமஹா நிறுவனம் முன்னணி நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக உள்ள நிலையில், Y-AMT (Yamaha Automated Manual Transmission) எனும் நுட்பத்தின் மூலம் மிக இலகுவாக கியர் ஷிஃப்ட் அனுபவத்தை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Yamaha Automated Manual Transmission என்பது முழுமையாக ஆட்டோமேட்டிக் முறையில் இயங்கவும் அல்லது மேனுவல் முறையில் கியர் ஷிஃப்ட்டை பட்டன் மூலம் மேற்கொள்ளும் வகையில் வழங்கியுள்ளதால், மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக யமஹா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால் மற்றும் கை இணைந்து செயல்பட்டு கியர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டி உள்ள நிலையில், இதற்கு பதிலாக கைகளால் மட்டும் கியர் மாற்றத்தை ஏற்படுத்தவும் அல்லது ஆட்டோமேட்டிக் முறையில் மாற்ற அனுமதிக்கும் பொழுது மற்ற ஸ்போர்ட்டிவ் அனுபவங்களை முழுமையாக பெறவும், கியர் மாற்ற காலினை நகர்த்த வேண்டிய அவசியமில்லாத காரணத்தால் தொடர் வேகத்தை பராமரிக்கவும், வளைவுகளில் சிறப்பான உடல் நிலை மற்றும் எடைப் பங்கீட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.
Y-AMT அமைப்பில் விரலால் இயக்கப்படும் மேனுவல் ஷிப்ட், ‘MT’ அல்லது முழு ஆட்டோமேட்டிக் ‘AT’ தேர்வு செய்யலாம். சவாரி செய்பவரின் விருப்பம் மற்றும் வெவ்வேறு சாலை நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
மேனுவல் டிரான்ஸ்மிஷனை (MT) முறையை பயன்படுத்தும் பொழுது வேகமான மற்றும் துல்லியமான கியர் ஷிப்ட்கள், கிளட்ச் லீவரை இயக்காமல் ஒரு பட்டனை மாற்றுவதன் மூலம் சாத்தியப்படுகின்றது. ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலைக் கொண்டு, இரண்டு see-saw ஷிஃப்டிங் லீவர்கள் மூலம் ஷிப்ட்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அப்ஷிஃப்ட்களுக்கு ஒரு பிளஸ் லீவர் மற்றும் டவுன்ஷிஃப்ட்களுக்கு ஒரு மைனஸ் லீவரும் உள்ளது.
ஸ்போர்ட்டியர் ரைடிங்கில் அதிக கட்டுப்பாட்டிற்கு, பிளஸ் லீவரை மேலே நகர்த்தவும், ஆள்காட்டி விரலால் மட்டும் கீழே நகர்த்தவும் முடியும். ஏனெனில் கைப்பிடியில் இருந்து கட்டைவிரலை அகற்ற வேண்டிய அவசியமில்லை.
நவீன மாடல்களில் உள்ள க்விக் ஷிஃப்டரைப் பயன்படுத்துவதை விட, ஒவ்வொரு ஷிஃப்ட்டின் வேகமும் துல்லியமும் மிகவும் சீரானதாக இருப்பதால், ஸ்போர்ட்டியான ரைடிங் நிலைகளில் வேகமான, மென்மையாய் கியர் மாற்றங்களின் உற்சாகத்தை வழங்கும் என யமஹா குறிப்பிட்டுள்ளது.
முழுமையான ஆட்டோமேட்டிக் (AT) டிரான்ஸ்மிஷனில் D, D+ என இருவிதமான மோடுகள் உள்ளதால், முந்தைய ஏஎம்டி போல விரலால் கியரை மாற்ற வேண்டிய அவசயமில்லை. இது முழுமையாக ஆட்டோமேட்டிக் முறையில் செயல்படுவதனால் எவ்விதமான சாலைகளிலும் இலகுவாக பயணிக்கலாம்.
இதில் உள்ள D+ ரைடிங் மோடு மூலம் நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்றதாகவும், D டிரைவ் மோடு போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களுக்கு ஏற்றதாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி “யமஹா எதிர்காலத்தில் Y-AMT நுட்பத்தை பலவிதமான மாடல்களில் அறிமுகப்படுத்த உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நுட்பம் ஸ்போர்ட், டூரிங் மாடல்கள் மட்டுமல்லாமல் தினசரி கம்யூட்டிங் பிரிவிலும் வரக்கூடும்.