விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம் ஒதுக்கியதாக சலசலப்பு

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட 64 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு தாக்கலில் 55 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு மீதான பரிசீலனை 24-ம் தேதி விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

இடைத்தேர்தலில் போட்டியிட 64 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு தாக்கலில் 55 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களான திமுகவை சார்ந்த வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் ஆட்சியர் பழனி விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் மாதிரி வாக்குப்பதிவு, வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியீடு மற்றும் சின்னம் ஒதுக்குதல் மற்றும் வாக்கு எண்ணிக்கை இடம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இறுதி வேட்பாளருக்கான பட்டியல் மாலை வெளியிடப்பட்டது.

திமுக பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி இத்தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் பானை சின்னத்தில் வெற்றி பெற்றனர்.

தற்போது திமுக வேட்பாளருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க சென்று இருக்க கூடிய சூழ்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் பானை சின்னம் கேட்டு விண்ணப்பித்திருப்பனர். இவர்களில் ஒருவருக்கு பானை சின்னம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் வெப் சைட்டில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பானை சின்னத்தை சுயேட்சை வேட்பாளர் யாரேனும் பெற்றால், திமுகவில் வாக்குகள் குறைய வாய்ப்பு இருப்பதால் யாருக்கும் அச்சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று ஆளும்கட்சியினர் மாவட்ட தேர்தல் அலுவலரை வலியிறுத்தியுள்ளார். இரவு 9 மணியை கடந்தும் அதிகாரபூர்வ பட்டியலை இன்னமும் மாவட்ட நிர்வாகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.