இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வெற்றியளித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஒஸ்ட்ரியாவின் வியானா நகரில் இடம்பெற்ற ஒபெக் நிதி அபிவிருத்தி அமர்வில், பரவலான மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தின் ஊடாக சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கு இலங்கை எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக அங்கத்திதுவ நாடுகளுக்குத் தெளிவுபடுத்தும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
நிலைபேறான அபிவிருத்திக்காக அத்தியவசியமான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் நிறுவன ரீதியான திறனை மீளமைத்தல் என்பவற்றை இவ்வேலைத்திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இலஞ்ச ஊழல் சட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை ஆணைக்குழுவை (CAIBOC) பலப்படுத்தல் இதன் முக்கியமான படிமுறை என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இதன்ஊடாக நலன்புரி சான்றுப்படுத்தலுக்காக இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதை அரசாங்கத்தின் நோக்கம் என்பதுடன், போராட்டத்தின் பின்னர் அவசியமான மறுசீரமைப்பிற்காக அரசாங்கத்தின் பலமான மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி புதிய ஊழல் எதிர்ப்புச் சட்ட அபாயங்களைத் தீர்ப்பதற்காக மிகவும் வலுவான சட்ட வரையறைக்குள் வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தெரிவித்தார்.
அரச நிதி மற்றும் நிதித் துறையை பலப்படுத்துதல் ஒவ்வொரு பிரஜையினாலும் அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட முன்னேற்றம் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே ஒபெக் நிதி அபிவிருத்தி அமர்வின் இடையே, அறபுப் பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் வலீத் அல் பஹார் மற்றும் சவூதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அப்துல் ரஹ்மான அல் மர்ஷத் ஆகியோரையும் சந்தித்தார்.
அதன்போது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் புதிய அபிவிருத்தி என்பவற்றை அடிப்படையாக வைத்து கவனம் செலுத்தி கூட்டு முயற்சியை வலுப்படுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.