அனைத்து பாடசாலை மாணவர்களின் நலன்களையும் கருத்திற்கொண்டு நாளை (28) பணிக்கு சமூகமளிக்குமாறு, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பதில் கல்வி அமைச்சரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்…
சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகள் ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பு இன்றி மாணவர்களுக்கு தொடர்ச்சியான கல்வியை வழங்கி வருகிறது. இந்த ஆசிரியர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அந்த பாடசாலைகளில் கல்வி கற்க முடியாத மாணவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வாக 2022 ஆம் ஆண்டு குழுவொன்று நியமிக்கப்பட்டு தரம் iii 2 இன் சம்பளம் 14மூ அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாதாந்தம் 3750 ரூபாவினால் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். .
மேலும், தரம் 1 இன் சம்பளம் 26மூ அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த தரத்தின் சம்பளம் 17,720.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் முழு அரச சேவையினதும் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.டடன், அந்த சம்பள அதிகரிப்பானது ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன்;, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் என தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் எந்த அரசாங்கமும் கடன் பெறுவதற்கோ அல்லது பணம் அச்சிடுவதற்கோ திறைசேரியினால் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.