திருடச் செல்லும் திருடர்கள், வீடுகளில் இருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு உறங்கி விடுவதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் சத்தீஷ்கர் மாநிலத்தில், திருடன் ஒருவன் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டு, போலீஸில் சிக்கிக்கொண்டான். ராய்பூரைச் சேர்ந்த வினய் குமார் சாஹு என்பவன் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து வீடுகளில் திருடி வந்தான். அவன் அங்குள்ள ஒரு வீட்டில் இரண்டு முறை ஏற்கெனவே திருடி இருந்தான். புதிய வீட்டை தேடுவதற்கு பதில் ஏற்கெனவே திருடிய வீடுதான் பாதுகாப்பு என்று கருதி, அந்த வீட்டிற்குள் இரவில் திருடச் சென்றான். உள்ளே நுழைந்த திருடனுக்கு வீட்டிற்குள் நுழைந்ததும் படுக்கை அறைக்குள் செல்ல முயன்றபோது, அங்கு வீட்டு உரிமையாளரான தம்பதி தனிமையில் இருந்திருக்கின்றனர்.
உடனே சுதாரித்துகொண்டு தம்பதி தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து காசாக்க முடிவு செய்த திருடன், அதை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தான். தம்பதிக்கு தெரியாமல் வீடியோ எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். அதன் பிறகு அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட தம்பதிக்கு அனுப்பி, 10 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லையெனில் வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டினான். வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதி, இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். வீடியோவை திருட்டு மொபைல் போனில் இருந்து சாஹு அனுப்பி இருந்தான். எனவே அதனை வைத்து திருடன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, போலீஸார் அவனைக் கைதுசெய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb