சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் விவோ T3 Lite 5ஜி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இப்போது இந்தியாவில் T3 Lite 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் T3 மற்றும் T3x மாடல் போன்கள் வெளியாகி இருந்தது.
விவோ T3 Lite: சிறப்பு அம்சங்கள்
- 6.56 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- 50 + 2 மெகாபிக்சல் என பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 4ஜிபி மற்றும் 6ஜிபி என இரண்டு ரேம்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 128ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்டுள்ளது
- 5,000mAh பேட்டரி
- இந்த போனுடன் 15 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் வழங்கப்படுகிறது
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போன் வரும் ஜூலை 4 முதல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது
- இதன் விலை ரூ.10,499 முதல் ஆரம்பமாகிறது
Ready to #GetSetTurbo? The all-new vivo T3 Lite 5G is coming in hot!
Click the link below to know more!https://t.co/3JUSjAX8z2 pic.twitter.com/Na5gPcsLI0
— vivo India (@Vivo_India) June 27, 2024