பிக்னிக் சென்ற இடத்தில் குடிபோதையில் சரிந்த காதலன்; நண்பர்களால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் பெரும்பாலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால்தான் இது போன்ற செயல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதனால் அதிகமான குற்றங்கள் வெளியில் தெரியாமல் போய்விடுகிறது. மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், தனது காதலனுடன் வெளியில் சென்றார். அவர்களுடன் காதலனின் இரண்டு ஆண் நண்பர்களும் சேர்ந்து கொண்டனர். அவர்கள் கடலுக்குள் இருக்கும் கோராய் தீவிற்கு படகில் சென்றனர். அங்கு அவர்கள் ரிசார்ட் ஒன்றில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்து நள்ளிரவு வரை மது அருந்தினர். அப்பெண்ணின் காதலன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், அப்படியே படுத்து உறங்கிவிட்டான். உடனே அவருடன் சென்ற இரு ஆண் நண்பர்கள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பாலியல் வன்கொடுமை

அதோடு, `இது குறித்து உனது காதலனிடம் சொன்னால், கடும் விளைவு ஏற்படும்’ என்றும் மிரட்டினர். இதனால் பயத்தில் அப்பெண் இது குறித்து தனது காதலனிடம் தெரிவிக்கவில்லை. அங்கிருந்து வந்த பிறகு அதே பெண் தனது காதலனுடன் மீண்டும் வெளியில் சென்றார். இம்முறை அவர்களுடன் ஏற்கெனவே அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவரும், அவரது நண்பர் மற்றும் ஒரு பெண்ணும் வந்திருந்தனர்.

காதலன் அவர்களுடன் வந்த பெண்ணை அழைத்துச் சென்று விடுவதற்காக சென்றார். அந்த நேரத்தில் தனியாக இருந்த பெண்ணை இருவரும் சேர்ந்து மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர்.

இச்சம்பவங்களால் மிகவும் அதிர்ச்சிக்குள்ளான அப்பெண் வீட்டில் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். ஆனால் சரியான நேரத்தில் அவர் காப்பாற்றப்பட்டுவிட்டார்.

கைது

இதனைத் தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரித்தபோது, எதையும் சொல்லவில்லை. ஆனால் அதன் பிறகு தனது தந்தையிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து, குற்றவாளிகளைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.