ரயில்களில் பயணிகளை ஆடு மாடுகளை அடைப்பது போல் ஏற்றிச் செல்வதால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் இது ரயில்வே துறையின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகவும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மும்பை புறநகர் ரயில்களில் நாளொன்றுக்கு 40 லட்சம் பயணிகள் பயணிப்பதாக 2012ம் ஆண்டு கணக்கெடுப்பு கூறுகிறது. ஆண்டுக்கு ஆண்டு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளையில் பழமையான ரயில் நிலையங்களின் மோசமான உள் கட்டமைப்புகள் காரணமாக ஆண்டுக்கு 2000 பேர் உயிரிழக்க நேரிடுகிறது. தண்டவாளத்தை கடப்பது, […]