சென்னை: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களின் சூட்டிங் அடுத்தடுத்து நடந்து வருகிறது. கடந்த மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் துவங்கிய நிலையில், ஹைதராபாத்தில் படத்தின் முதல் கட்ட சூட்டிங்கை அஜித் முடித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் அசர்பைஜானில் மீண்டும் துவங்கியுள்ளது.
