இந்தியாவின் 125சிசி பைக் செக்மெண்டில் அதிகம் விற்பனையான டாப் 5 பைக்குகளை தான் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம் இந்த பிரிவில் ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் 125 மற்றும் எஸ்பி 125 என இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 1,26,907 ஆக பதிவு செய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 125 மற்றும் NS125 இணைந்து 74,072 ஆக பதிவு செய்துள்ளது.
அடுத்தப்படியாக, டிவிஎஸ் மோட்டாரின் பிரசத்தி பெற்ற ரைடர் 125 பைக்கின் விற்பனை எண்ணிக்கை 37,249 ஆக மே 2024 மாதந்திர விற்பனையில் பதிவு செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ நிறுவன சூப்பர் ஸ்பிளெண்டர் 27,886 ஆகவும், கிளாமர் 125 எண்ணிக்கை 19,028 ஆக பதிவு செய்துள்ளது.
புதிதாக ஹீரோ வெளியிட்டிருந்த எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் எண்ணிக்கை 14,326 ஆக உள்ளது. மேலும் பஜாஜ் ஆட்டோவின் CT125X விற்பனை எண்ணிக்கை மே மாதம் பூஜ்யமாக உள்ளது. அடுத்து ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்துகின்ற பிரீமியம் கேடிஎம் டியூக் 125 எண்ணிக்கை 144 ஆக உள்ளது.
இந்தியாவின் 125சிசி சந்தையில் தொடர்ந்து ஹோண்டா முதலிடத்தில் உள்ள நிலையில் விரிவான அட்டவனை ஒப்பீடு விபரத்தை கீழே அறிந்து கொள்ளலாம்.
மே 2024 மாத டாப் 125சிசி பைக்கின் விற்பனை நிலவரம் பின்வருமாறு;-
டாப் 125சிசி பைக் | மே 2024 | மே 2023 |
1. ஹோண்டா ஷைன்/SP125 | 1,26,907 | 83,230 |
2. பஜாஜ் பல்சர் 125/NS125 | 74,072 | 87,071 |
3. டிவிஎஸ் ரைடர் 125 | 37,249 | 34,440 |
4. ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் | 27,886 | 43,213 |
5. ஹீரோ கிளாமர் | 19,028 | 15,875 |
6. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R | 14,326 | – |
7. கேடிஎம் டியூக் 125 | 144 | 292 |