தற்பொழுது நான்காம் தலைமுறை மாருதி சுசூகி நிறுவன ஸ்விஃப்ட் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்திய சந்தையில் மட்டும் 30 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ளது. சர்வதேச அளவில் சுமார் 65 லட்சத்துக்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
இந்திய சந்தையில் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுசூகி ஸ்விஃப்ட் வெற்றிகரமாக முதல் 10 இலட்சம் இலக்கை 2013 ஆம் ஆண்டிலும், 2018 ஆம் ஆண்டு 20 இலட்சம் இலக்கை கடந்திருந்தது. அடுத்து 30 லட்சத்தை தற்பொழுது நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் மூலம் கடந்துள்ளது.
30 லட்சம் விற்பனை இலக்கு குறித்து மாருதி சுசூகி இந்தியா லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையின் மூத்த செயல் அதிகாரி பார்த்தோ பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், “ஸ்விஃப்ட் கார்களை வைத்திருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு கார் மட்டுமல்ல சுதந்திரம், சிறப்பான மற்றும் நம்பகமான சின்னமாக உள்ளது. ஒவ்வொரு புதிய தலைமுறையிலும், ஸ்விஃப்ட் காருக்கு அதிநவீன தொழில்நுட்பம், சமகால ஸ்டைல் மற்றும் வாடிக்கையாளர்களைக் கவரும் ‘ஸ்விஃப்ட் DNA’ போன்றவற்றைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அனைத்து ஸ்விஃப்ட் உரிமையாளர்களுக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டார்.
உலகளவில், ஸ்விஃப்ட் பெட்ரோல், டீசல் மற்றும் ஸ்போர்ட்டிவ் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ஆகியவற்றில் மிகவும் பிரபலமாக உள்ளது. மொத்த விற்பனை 6.5 மில்லியனை (65 லட்சம்) தாண்டியுள்ளது. ஸ்விஃப்ட்டின் உலகளாவிய விற்பனையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் இந்தியாவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னமான சுசூகி ஹயபுஸா மோட்டார்சைக்கிளால் ஈர்க்கப்பட்டு, ஸ்விஃப்ட் 2005 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏசி, ஏர்பேக்குகள் மற்றும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) போன்றவற்றை முதன்முறையாக இந்த பிரிவில் முதல் அறிமுகப்படுத்தப்பட்டதாக மாருதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.