ஜியோ செல்போன் கட்டணம் உயர்வு: ஜூலை 3-ந் தேதி முதல் அமல்

புதுடெல்லி,

ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தையும் உயர்த்துகிறது. 12 சதவீதம் முதல் 27 சதவீதம்வரை கட்டணம் உயர்கிறது. ஜூலை 3-ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, முதல்முறையாக செல்போன் சேவை கட்டணங்களை ஜியோ உயர்த்துகிறது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.