லோக்சபா தேர்தல் 2024 முன்பே, ரீச்சார்ஜ் பிளான்களின் விலை எல்லாம் உயரப்போகுது என்ற செய்தி வெளியானது. அது தற்போது உண்மையாகியுள்ளது. ஜியோ, ஏர்டெல் இரண்டு நிறுவனங்களும் தங்களின் அனைத்து ரீச்சார்ஜ் பிளான்களின் விலையையும் உயர்த்தியுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு இடியாக அமைந்த செய்தியாக அமைந்திருக்கிறது. மெதுமெதுவாக விலைகளை எல்லாம் ஏற்றிக் கொண்டிருந்த ஜியோ, இந்த முறை ஒரே அடியாக 22 விழுக்காடு வரை பிளான்களின் விலையை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அத்துடன் ஜியோவின் ரூ.395 மற்றும் ரூ.1559 என இரண்டு திட்டங்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் அன்லிமிடெட் டேட்டாவின் பலன் கிடைத்த நிலையில், அதனை முதலாவதாக கட் செய்திருக்கிறது ஜியோ. அதுமட்டுமல்லாமல் ஜூலை 3, 2024 ஆம் தேதிக்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோ அதன் பல மொபைல் திட்டங்களின் விலையை மேலும் உயர்த்தப் போகிறது. இதனால், பல பயனர்கள் குறைந்த கட்டணத்தில் தங்களுக்கு பிடித்த திட்டங்களை முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து வைத்துக் கொண்டுள்ளனர்.
2 பிளான்களை நிறுத்திய ஜியோ
ஜியோவின் ரூ.395 மற்றும் ரூ.1559 ஆகிய இரண்டு திட்டங்களும் வரம்பற்ற 5ஜி டேட்டாவுடன் வருகின்றன. ரூ.395 திட்டத்தில் 84 நாட்கள் செல்லுபடியாகும்.
அதேசமயம் ரூ.1559 திட்டத்தில் 336 நாட்கள் செல்லுபடியாகும். மொபைல் டேட்டாவை நம்பி இருப்பவர்களுக்கு இந்த திட்டம் சரியான தேர்வாகும். இருப்பினும் இந்த இரு திட்டங்களை தான் ஜியோ நிறுத்தியிருக்கிறது. ஜியோவின் இந்த நடவடிக்கையானது வருவாய் இழப்பிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. சராசரி வருவாயை பாதிக்கும் திட்டங்கள் என்பதால் இதில் கைவத்திருக்கிறார் அம்பானி.
எவ்வளவு கட்டணங்கள் உயர்வு
ஜியோ கட்டண உயர்வு
ஜியோவின் கட்டண விலை உயர்வு வெவ்வேறு ஸ்பெக்ட்ரம் திட்டங்களை பாதிக்கும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். எடுத்துக்காட்டாக, அடிப்படை ரூ.155 திட்டம் 22% அதிகரித்து ரூ.189 ஆக மாறும். இந்த ஒட்டுமொத்த வளர்ச்சியானது, ஜியோவின் ARPU ஐ அதிகரிப்பதற்கும், வருமானத்தை மேம்படுத்துவதை அடிப்படையாக கொண்டு இந்த கட்டண உயர்வை அமல்படுத்தியிருக்கிறது. இந்த விலை உயர்வுக்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. அண்மையில் மகனின் கல்யாணத்தை தடபுடலாக நடத்திய அம்பானி, அதற்கு செலவு செய்த காசையெல்லாம் இப்படி விலையை உயர்ந்து சரிகட்டுகிறார் போல என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.