டி20 உலகக்கோப்பை : ஆஸி, இங்கிலாந்து செஞ்ச தப்ப தென்னாப்பிரிக்காவும் செஞ்சா கப்பு இந்தியாவுக்கு தான்

டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி சனிக்கிழமை பர்படாஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று 2வது முறை டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய அணியும், ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கும் தென்னாப்பிரிக்க அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பிலும் இருக்கின்றன. இரு அணிகளும் நடப்பு உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இருக்கின்றன என்பதால், இப்போட்டியில் வெற்றி பெறும் அணி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் முதல் அணி என்ற சாதனையை படைக்கப்போகிறது.

இந்திய அணிக்கு அதிர்ஷ்டம்

இந்திய அணியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்யவே விரும்புகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும் டாஸ் தோற்றிருந்தாலும், முதலில் பேட்டிங் ஆடியது. அதாவது டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் செய்வதாக அறிவித்திருந்தது. ஆனால் அப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி அற்புதமாக பந்துவீசி அந்த அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டபோது, அந்த அணியின் கேபட்ன் பட்லர் டாஸ் வெற்றி பெற்று பந்துவீசுவதாக அறிவித்தார். ஆனால் ரோகித் சர்மா டாஸ் வெற்றி பெற்றிருந்தாலும் பேட்டிங்கையே தேர்வு செய்திருப்போம் என தெரிவித்தார். இப்போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா நிலை என்ன?

பர்படாஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் ஒருவேளை டாஸ் வெற்றி பெற்றால் பவுலிங்கையே எடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகின்றனர். ஏனென்றால் பேட்டிங்கில் இரண்டாவது இன்னிங்ஸில் எதிர்பார்த்தளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் பிட்சில் அதிரடியாக ஆட முடியவில்லை. அதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆட விரும்புகிறது. தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை ஐசிசி தொடர்களில் சேஸிங் செய்வது அந்த அணிக்கு செட்டாகாது. இதுவரை சேஸிங் ஆடி பல முக்கியமான போட்டிகளை தோற்றிருக்கிறது அந்த அணி. 

அதனால், நாளைய போட்டியில் டாஸ் வெற்றி பெற்றால் அந்த அணியும் பேட்டிங்கையே தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி டாஸ் வெற்றி பெற்றாலும் பேட்டிங்கையே தேர்வு செய்யும். அதனால் டி20 உலகக்கோப்பையை பொறுத்தவரை இரு அணிகளுக்கும் டாஸ் முக்கிய பங்காக மாறியுள்ளது. அதனால் இந்த அதிர்ஷ்டம் யார் பக்கம் வீசப்போகிறது என்பது சர்பிரைஸாக இருக்கிறது. ஒருவேளை டாஸ் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தால் இந்திய அணிக்கு டபுள் ஜாக்பாட் தான். டி20 உலக கோப்பை சாம்பியன் என அப்போதே எழுதி வைத்துவிடலாம்.

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.