தலிபான்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பெண்களின் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பப்படும்: ஐ.நா. துணை பொதுச் செயலர் தகவல்

நியூயார்க்: ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்களிடம் பெண்களின் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் என்று ஐ.நா. துணை பொதுச் செயலர் ரோஸ்மேரி டிகார்லோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்கள் மற்றும் 25 நாடுகளின் தூதர்கள் பங்கேற்கும் முதல்கூட்டம் எனது தலைமையில் நடைபெறவுள்ளது. அடிப்படை உரிமை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஆப்கன் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்காதது குறித்து சர்வதேச அளவில் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு,ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரண்டு நாள் நடைபெறவுள்ள தலிபான் மற்றும் பிறநாடுகளின் தூதர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பெண் உரிமை தொடர்பான கேள்விகள் ஒவ்வொரு அமர்வின்போதும் ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்களிடம் எழுப்பப்படும். சர்வதேச சட்டங்களை கடைபிடித்து அண்டை நாடுகளுடன் சமாதானமாக இருப்பதை உறுதி செய்வதற்கான படிப்படியான செயல்முறையை முன்னெடுக்க இந்த கூட்டம் நல்ல தொடக்கமாக அமையும்.

ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, அமெரிக்கா, சீனா மற்றும் பல ஆப்கானிஸ்தான் அண்டைநாடுகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளன. இவ்வாறு டிகர்லோ தெரிவித்தார்.



இரண்டு தசாப்த கால போரைத்தொடர்ந்து அமெரிக்க மற்றும்நேட்டோ படைகள் வெளியேறியதால் 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். ஆனால் எந்த நாடும் அவர்களை ஆப்கானிஸ்தான் அரசாங்கமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் அங்கு மறுக்கப்பட்டுள்ளன. மேலும், ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பாக கேள்விகளை ஐ.நா. தலிபான்களிடம் எழுப்ப உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.