இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 150-155சிசி விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களில் மிகவும் பிரசத்தி பெற்ற பல்சர் 150 மற்றும் N150 என இரண்டும் சுமார் 29,386 யூனிட்டுகளை பதிவு செய்துள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக, யமஹாவின் நேக்டூ ஸ்டைல் பெற்ற எம்டி-15 ஆனது 14,612 மற்றும் 149சிசி என்ஜின் பெற்ற FZ சீரிஸ் விற்பனை எண்ணிக்கை 14,359 ஆகவும், பிரபலமான ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்ற ஃபேரிங் ரக யமஹா ஆர்15 விற்பனை 10,435 ஆக உள்ளது.
மேலும் இந்த சந்தையில் கிடைக்கின்ற சுசூகி நிறுவன ஜிக்ஸர் விற்பனை எண்ணிக்கை 1,168 ஆக மட்டும் பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை 150-155சிசி வரை கணக்கீடும் பொழுது நாட்டின் நெ.1 150சிசி பைக் தயாரிப்பாளராக யமஹா விளங்குகின்றது.
மே 2024 மாத டாப் 150சிசி பைக்கின் விற்பனை நிலவரம் பின்வருமாறு;-
டாப் 150சிசி பைக் | மே 2024 | மே 2023 |
1. பஜாஜ் பல்சர் 150/N150 | 29,386 | 19,034 |
2. யமஹா MT-15 | 14,612 | 7,156 |
3. யமஹா FZ | 14,359 | 16,919 |
4. யமஹா R15 | 10,435 | 11,280 |
5. சுசூகி ஜிக்ஸர் | 1,168 | 4,009 |