5 டோர் தார் அர்மடா உற்பத்தியை மஹிந்திரா துவங்கியதா..?

மஹிந்திராவின் பிரசத்தி பெற்ற தார் 3-டோர் எஸ்யூவி மாடலை தொடர்ந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரவுள்ள 5-டோர் பெற்ற தார் அர்மடா எஸ்யூவி மாடலுக்கான உற்பத்தியை மஹிந்திரா துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mahindra Thar Armada

மாதந்தோறும் 5,000 மேற்பட்ட டெலிவரிகளை 3-டோர் தார் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக மாதம் 2500-3,000 யூனிட்டுகளை தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்த 5-டோர் பெற்ற தார் அர்மடா உற்பத்தியை மாதம் 5,000 யூனிட்டுகளுக்கு மேலாகவும், ஆண்டுக்கு 70,000 யூனிட்டுகளை டெலிவரி செய்யவும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக, டீலர்கள் தொடர்ந்து 5 டோர் மாடலுக்கு வரவேற்பு குறித்து சேகரிக்கப்பட்ட தகவலின் மூலம் உற்பத்தி திட்டத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விற்பனையில் உள்ள மாடலின் அடிப்படையான டிசைனை பெற்றாலும் கூட கூடுதல் வீல் பேஸ், அதிகப்படியான வசதிகள், மாறுபட்ட ஸ்டைலிங் பெற்ற முன்பக்க கிரில் கொண்டிருக்கலாம். குறிப்பாக துவக்க நிலை RWD வேரியண்டுகளில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், AWD வேரியண்டுகளுக்கு 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் கூடுதலாக 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை பெறுவதுடன் மூன்று என்ஜினிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் பெற உள்ளது.

குறிப்பாக பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற மஹிந்திரா நிறுவனம் தார் அர்மடாவில் 6 ஏர்பேக்குகள் உட்பட Level 2 ADAS பாதுகாப்பு தொகுப்பு கொண்டிருக்கலாம். கூடுதலாக கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி லைட்டுகள், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் மாறுபட்ட டிசைன் பெற்ற அலாய் வீல் கொண்டிருக்கலாம்.

ஏற்கனவே டீலர்கள் மூலம் 5-டோர் அர்மடாவிற்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ முன்பதிவு துவங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள மஹிந்திரா தார் அர்மடா எஸ்யூவிக்கு போட்டியாக மாருதி சுசூகி ஜிம்னி உள்ளது.

source

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.