TNPSC குரூப் 1 தேர்வு வருகிற ஜூலை 13-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
அரசுப் பணிக்கான கனவுடன் பலரும் குரூப்-1 தேர்வுக்குத் தயாராகி வருகிறார்கள். இப்படியானவர்களுக்கு உதவும் வகையில் கல்வி விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து மாதிரித் தேர்வை நடத்தி வருகிறது. இந்த மாதிரித் தேர்வு கடந்த ஜூன் 16-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது
இத்தேர்வு தொடர்ந்து ஜூலை 12-ம் தேதி வரை நடைபெறும். ஏற்கெனவே இது போன்ற மாதிரித் தேர்வை குரூப் 4-க்காக கல்வி விகடன் ஒருங்கிணைத்திருந்தது. இதற்கு தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வினா-விடை தரப்படும். தினமும் 200 கேள்விகளுக்கு இந்த மாதிரித் தேர்வு நடத்தப்படும். இதற்கு 180 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். இதற்கு மொத்தமாக 300 மதிப்பெண்கள். ஒரு சரியான விடைக்கு 1.5 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் இல்லை. இப்படி 200 கேள்விகளுக்கும் விடையைத் தேர்வு செய்த பிறகு, நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண் திரையில் தோன்றும். நீங்கள் சரியாக விடையளித்த கேள்வியின் எண் பச்சை நிறத்திலும் தவறாக விடையளித்த கேள்வியின் எண் சிவப்பு நிறத்திலும் தோன்றும்.
சிவப்பு நிறத்தில் இருக்கும் எண்ணை க்ளிக் செய்தால், அந்தக் கேள்விக்குச் செல்வீர்கள். அங்கு அதற்கு சரியான விடை பச்சை நிறத்தில் சுட்டிக்காட்டப்படும். கூடவே, நீங்கள் எழுதிய வினா விடைத் தாளையும் காணலாம். ஒருவேளை தவறவிட்ட முந்தைய நாள் தேர்வுகளில் பங்கேற்க வேண்டுமெனில், முதலில் அந்த நாளுக்கான தேர்வை முடிக்கவேண்டும். அதன்பிறகே முந்தைய தேர்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு, தேர்வின் இறுதியில் மதிப்பெண் பகுதிக்கு கீழே காட்டப்படும். இப்படியான மாதிரித் தேர்வை தொடர்ந்து எழுதும்போது எந்தெந்த பகுதிகளில் நாம் அதிகமாக தவறு செய்கிறோம் என்பதைக் கண்டறிந்து அதைத் திருத்திக் கொள்ள உதவும்.
12-வது நாளான இன்றைய மாதிரித் தேர்வை எழுதிவிட்டீர்களா? கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து உடனடியாக இந்த மாதிரித் தேர்வை எழுதுங்கள்!