சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மத்திய சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்படும் ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று (28) இடம்பெற்றது.
இதன் போது சிறந்த அரசு நிறுவனங்களுக்கான சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான பிரிவின் கீழ் தேசிய வர்த்தக முகாமைத்துவ பாடசாலை (NSBM) எனப்படும் பசுமை பல்கலைக்கழகம் நிலைப்பேறான சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான பசுமை நட்பு செயற்பாட்டிற்காக தங்க விருதினைப் பெற்றுக் கொண்டது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருதில் அரச நிறுவனங்களுக்கான பிரிவில் பங்குபற்றி வெள்ளி விருதினை பெற்றுக்கொண்டது.
நாடாளவிய ரீதியில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள், பொது அமைப்புக்கள் என 902 நிறுவனங்கள் விண்ணப்பத்திருந்த நிலையில் பசுமை பாதுகாப்பு செயற்பாடுகள், நிலைபோறான சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான வேலை திட்டங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாக சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபையினால் சூழல் பசுமை நட்பு ஊக்கப்படுத்தல் வேலைத் திட்டத்தில் ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.