ஜியோ vs ஏர்டெல் vs VI : எந்த பிளான்களுக்கு எவ்வளவு விலை அதிகமாகியிருக்குனு தெரிஞ்சுக்கோங்க

முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகியவை அனைத்து பிளான்களின் விலையையும் உயர்த்த இருகின்றன. இதனால், இனி வரும் காலங்களில் பயனர்கள் ரீசார்ஜ் செய்ய ரூ.600 வரை அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கும். குறிப்பாக, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஜூலை 3 முதலும், Vodafone-Idea (Vi) இன் உயர்த்தப்பட்ட விலைகள் ஜூலை 4 முதல் அமலுக்கு வரும். அப்போது இந்த நிறுவனங்கள் தங்கள் அடிப்படைத் திட்டங்கள் முதல் வருடாந்திர திட்டங்கள் வரை அனைத்து பிளான்களின் விலையையும் ஒரே நேரத்தில் உயர்த்த இருக்கின்றன. 

இதனால், ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை அதிகரிப்பு குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா வாடிக்கையாளர்கள் இந்த விலை உயர்வில் இருந்து ஒரு வருடத்திற்கு தப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதாவது, இந்தத் திட்டங்களை இப்போதே ரீசார்ஜ் செய்வதன் மூலம், ஒரு வருடம் முழுவதும் கட்டண உயர்விலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டங்களின் சிறப்பு என்னவென்றால், நிறைய டேட்டா மற்றும் இலவச அழைப்புகளுடன், கூடுதல் பலன்களையும் பெறுவீர்கள்.

ஜியோவின் ரூ 2999 திட்டம்

ஜூலை 3 முதல் ஜியோவின் திட்டங்கள் விலை உயர இருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், ஜூலை 3 முதல் இந்த திட்டத்திற்காக நீங்கள் ரூ.3599 செலவழிக்க வேண்டும். இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில், இணையத்தைப் பயன்படுத்த தினமும் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. தகுதியான பயனர்கள் இந்த திட்டத்தில் வரம்பற்ற 5G டேட்டாவையும் பெறுவார்கள். ஜியோவின் இந்த திட்டம் ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது. இதில் நீங்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளைப் பெறுவீர்கள். ஜியோ இந்த திட்டத்தில் ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவிக்கு இலவச அணுகலை வழங்குகிறது.

ஏர்டெல்லின் ரூ.2999 திட்டம்

ஏர்டெல்லின் இந்த திட்டத்தின் விலை அடுத்த மாதம் முதல் ரூ.3599 ஆக இருக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் இணையத்தைப் பயன்படுத்த தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். ஏர்டெல்லின் 5ஜி நெட்வொர்க்கில் வசிக்கும் பயனர்களுக்கு நிறுவனம் வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் Wynk Musicக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.

Vodafone-Idea திட்டம் ரூ.2899

365 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டம் Binge All Night நன்மையுடன் வருகிறது. இதில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை கூடுதல் கட்டணம் ஏதுமின்றி பயனாளர்களுக்கு வரம்பற்ற டேட்டாவை நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புடன் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் பெறுவீர்கள். வோடாவின் இந்த திட்டம் பல கூடுதல் நன்மைகளுடன் வருகிறது. இதில் டேட்டா டிலைட்ஸ் மற்றும் வார இறுதி டேட்டா ரோல்ஓவர் ஆகியவையும் அடங்கும். ஜூலை 4 முதல், இந்தத் திட்டத்திற்கு நீங்கள் ரூ.3499 செலவழிக்க வேண்டும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.