டி20 உலகக் கோப்பை லெவன் அணியை அறிவித்த ஆஸ்திரேலியா – ரோகித் சர்மா கேப்டன் இல்லையாம்

டி20 உலக க்கோப்பை இறுதிப் போட்டி இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் நிலையில், கிரிக்கெட்ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்ட தங்கள் கனவு அணியை அறிவித்திருக்கிறது. பார்படாஸில் இறுதிப் போட்டி நடப்பதற்கு முன்னதாபக இந்த அணியை வெளியிட்டிருக்கும் அந்த அணி, கேப்டன்சி பொறுப்புக்கு ஆச்சரியமான ஒரு முடிவை எடுத்திருக்கிறது. இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கேப்டன் ரோகித், தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்கிரம் ஆகியோருக்கு தங்கள் கனவு அணியின் கேப்டன் பொறுப்பை கொடுக்காமல், ரஷித் கானுக்கு அந்த பொறுப்பை ஆஸ்திரேலியா கொடுத்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித்கான் டி20 உலகக்கோப்பையில் சிறப்பாகவே விளையாடினார். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மட்டும் பங்களிப்பு செய்யாமல் கேப்டன்சி பொறுப்பிலும் சிறந்து விளங்கினார். ஆப்கானிஸ்தான் அணியை கட்டுக்கோப்பாக வழிநடத்திய ரஷித்கான், தங்கள் அணியில் இருக்கும் அனைத்து பிளேயர்களையும் அரவணைத்து டி20 உலகக்கோப்பையில் முத்திரை பதிக்க செய்தார். அதனால், தான் ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகளை எல்லாம் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி, கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பிளேயரும் ஆப்கானிஸ்தானுக்காக ரத்தமும் சதையுமாக விளையாடியை டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் விளையாடினர். 

இதனை கவுரவிக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கானுக்கு தங்கள் கனவு அணியின் கேப்டன் பொறுப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கொடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள கனவு அணியில் மூன்று இந்திய பிளேயர்கள், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா இரண்டு நட்சத்திரங்களையும், மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, வங்காளதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து தலா ஒரு வீரரையும் தேர்ந்தெடுத்திருக்கிறது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள கனவு அணியில், தொடக்க ஆட்டக்காரர்களைப் பொறுத்தவரை, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆஸ்திரேலிய சவுத்பா டிராவிஸ் ஹெட் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், ரோஹித்துக்கு கேப்டனாக அணியில் இடம் கிடைக்கவில்லை. அதற்கு பிறகு வருவோம். மேற்கிந்தியத் தீவுகளின் நிக்கோலஸ் பூரன், அமெரிக்காவின் ஆரோன் ஜோன்ஸ் மற்றும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் மிடில்-ஆர்டர் பிளேயர்களாக இடம் பிடித்துள்ளனர்.

பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சாளர் ரிஷாத் ஹொசைனும் அணியில் இடம்பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, அன்ரிச் நார்ட்ஜே மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோர் இந்த லெவன் அணியில் உள்ளனர். 

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் டி20 உலகக் கோப்பை லெவன்: ரோஹித் சர்மா, டிராவிஸ் ஹெட், நிக்கோலஸ் பூரன், ஆரோன் ஜோன்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் (கேப்டன்), ரிஷாத் ஹொசைன், அன்ரிச் நார்ட்ஜே, ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.