ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதியமைச்சகம் நிர்ணயிக்கிறது. இந்த நிலையில், ஜூலை – செப்டம்பர் காலாண்டுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த டிசம்பர் காலாண்டுக்குப்பின் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்படாமலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் காலாண்டுக்கும் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதிகபட்சமாக சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வமகள் சேமிப்புத் திட்டம்) திட்டத்துக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்காக முதலீடு செய்வதற்கு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்துக்கு 7.7% வட்டியும், கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்துக்கு 7.5% வட்டியும் வழங்கப்படுகிறது.
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம்:
சேமிப்புத் திட்டம் : 4%
1 ஆண்டு டைம் டெபாசிட் : 6.9%
2 ஆண்டு டைம் டெபாசிட் : 7%
3 ஆண்டு டைம் டெபாசிட் : 7.1%
5 ஆண்டு டைம் டெபாசிட் : 7.5%
5 ஆண்டு ரெகரிங் டெபாசிட் : 6.7%
சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம் : 8.2%
மாத வருமானக் கணக்குத் திட்டம் : 7.4%
தேசிய சேமிப்பு சான்றிதழ் : 7.7%
பி.பி.எஃப் (PPF) : 7.1%
கிசான் விகாஸ் பத்திரம் : 7.5%
சுகன்யா சம்ரிதி யோஜனா : 8.2%