தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தலைமையில் வெல்வோம் ஶ்ரீ லங்கா நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் யூர்த் நிகழ்வு இன்று (29) மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இளைஞர் யுவர்களை வேலை வாய்ப்பிற்காக தயார்படுத்தும் முகமாக சிறந்த தொழில் இலக்கை அமைத்துக் கொள்ளுதல், தொழில் இலக்கை அடைவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் அதற்காக இலங்கை மற்றும் வெளிநாட்டில் உள்ள வாய்ப்புக்களை பயன்படுத்தி ஸ்மாட் யூத்தாக வாழ்க்கையில் உயர்வதை நோக்காக கொண்டு இந் நிகழ்வு நடைபெற்றது .
இளைஞர்கள் தமது கனவு வாழ்க்கையை நிஜமாக்கும் வகையில் தமது திறன்களை இனம் கண்டு முறைசார் மற்றும் முறைசாரா உலகத்தரம் வாய்ந்த தொழிலாளர்களாக புதிய தொழில் நுட்ப விருத்திற்கு ஏற்றவாறு தமது ஆற்றலை வளர்த்து வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் அமைச்சர் இளைஞர் யுவதிகளுக்கு தெளிவு படுத்தினார்.
அத்துடன் சிறு மாற்றத்தில் பாரிய எழுச்சியை ஏற்படுத்த முடியும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என இளைஞர்களை ஊக்கப்படுத்திய அமைச்சர் எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ,
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் கே.ஜீ.எச்.என்.ஆர் கிரியெல்ல, மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்கள பணிப்பாளர் சுமித், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த்,தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், மாவட்ட செயல உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.