விராட் கோலி ஓய்வு அறிவிப்பு…. இனி இந்திய அணிக்காக ஆடமாட்டார்..!

டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற கையோடு இந்த பார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் விராட் கோலி. பார்படாஸில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போட்டியில் 76 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய விராட் கோலி, டி20 உலகக்கோப்பை வென்றது மகிழ்ச்சியை கொடுப்பதாகவும், இந்த மகிழ்சியோடு இந்த பார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். அடுத்ததாக இளம் தலைமுறைக்கு வழிவிடும் வகையில் 20 ஓவர் பார்மேட்டில் இருந்து இன்றோடு விடைபெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். 

ஓய்வு குறித்து விராட் கோலி பேசும்போது, ” இது எனது கடைசி டி20 உலகக் கோப்பை. இதைத்தான் நாங்கள் அடைய விரும்பினோம். இந்தியாவுக்காக விளையாடும் கடைசி டி20 ஆட்டம் இதுதான். டி20 உலகக்கோப்பையை அடைய விரும்பினோம். அது நடந்திருக்கிறது. என்னுடைய ஓய்வு என்பது ஒரு வெளிப்படையான ரகசியம். நாம் தோற்றாலும் நான் அறிவிக்கப் போவதில்லை. அடுத்த தலைமுறை T20 விளையாட்டை முன்னோக்கி எடுத்துச் சென்று ஐபிஎல்லில் அவர்கள் செய்ததைப் போல அற்புதங்களைச் செய்ய வேண்டிய நேரம் இது. அவர்கள் இந்திய கொடியை உயர்த்தி இந்த அணியை இனி இங்கிருந்து மேலும் கொண்டு செல்வார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஐசிசி போட்டியில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். இது நான் மட்டும் அல்ல. ரோஹித் போன்ற ஒருவரைப் பாருங்கள், அவர் 9 டி20 உலகக் கோப்பைகளை விளையாடியுள்ளார், இது என்னுடைய ஆறாவது உலகக் கோப்பை. 

June 29, 2024

அணியில் உள்ள மற்ற எவரையும் போலவே அவரும் இந்த சாம்பியன் கோப்பையை வெல்வதற்கு தகுதியானவர். எங்களால் இந்த வேலை சிறப்பாக செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி. நான் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். கடந்த சில ஆட்டங்களில் எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. நான் அந்த போட்டிகளின்போது நன்றாக உணரவில்லை. இது ஒரு அற்புதமான நாள். இந்த நாளை மறக்க முடியாது.” என உணர்ச்சி பொங்க பேசினார். அத்துடன் டி20 உலகக்கோப்பையை ஏந்தி இந்த பார்மேட்டுக்கு விடை கொடுத்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.