India vs South Africa T20 World Cup: கிரிக்கெட்டில் சில வீரர்களின் ஓய்வு ஒரு பெரிய சகாப்தத்தின் முடிவையும், இன்னொரு அத்தியாயத்தையும் தொடங்கி வைக்கும். இந்திய அணியில் இதே போல பல முறை நடந்துள்ளது. சச்சினுக்கு பிறகு விராட் கோலி, சேவாக்கிற்கு பிறகு ரோஹித் சர்மா, ஹர்பஜனுக்கு பிறகு ஜடேஜா, தோனிக்கு பிறகு பந்த் என முக்கிய வீரர்களின் இடத்தை நிரப்ப புதிய புதிய வீரர்கள் வந்து கொண்டு உள்ளனர். இன்று இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட தயாராகி வரும் நிலையில், பல முக்கிய வீரர்கள் இந்த போட்டியுடன் டி20 உலக கோப்பையில் இருந்து ஓய்வை அறிவிக்க கூடும். டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறக்கூடிய இந்தியாவின் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகுஓய்வுபெறும் இந்திய வீரர்கள்:
விராட் கோலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ரன் மிஷினுமான விராட் கோலி பல ஆண்டுகளாக அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் முக்கியமான வீரராக இருந்து வருகிறார். பல போட்டிகளை தனி ஒருவராக இருந்து முடித்து கொடுத்துள்ளார். மேலும் பல சாதனைகள் மற்றும் மேட்ச்-வின்னிங் வீரராக இருந்து வருகிறார் விராட் கோலி. இந்நிலையில், இந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். ஒரு அரைசதம் கூட தற்போது வரை அவர் அடிக்கவில்லை. இந்நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கக்கூடும்.
ரோஹித் ஷர்மா
இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா ஓப்பனிங் வீரராக பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். மிகவும் வெற்றிகரமான டி20 பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் ரோஹித் சர்மா உள்ளார். இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி, ஒருநாள் உலக கோப்பை பைனல் போட்டி என்ற இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம்.
ரவீந்திர ஜடேஜா
இந்திய அணியின் திறமையான ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பீல்டிங், பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறந்து விளங்கி வருகிறார். ஆனால் சமீப காலமாக ஜடேவின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. மேலும் ஐபிஎல் 2024 முதல் பவுலிங்கிலும் ரன்களை வாரி வழங்குகிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஜடேஜா, இந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு டி20யில் இருந்து மட்டும் ஓய்வை அறிவிக்கலாம்.
ரவிச்சந்திரன் அஷ்வின்
2022 டி20 உலக கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலக கோப்பை அணிகளில் இடம் பெற்று இருந்த ரவி அஸ்வின் இந்த ஆண்டு டி20 உலக கோப்பை அணியில் இடம்பெறவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை எடுத்து சாதனை படைத்து இருந்த அஸ்வின் விரைவில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க கூடும். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் அதிக கவனம் செலுத்தலாம்.