Nesippaya: "எந்த விழாவுக்கும் பெரிதாகப் போக மாட்டேன். ஆனால் இங்கே வந்ததன் காரணம்…" – நயன்தாரா

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’.

இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். சரத்குமார், பிரபு, குஷ்பு, கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். ரொமான்டிக் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தவிர நயன்தாரா, அதர்வா, ஆர்யா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட சில திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

Nesippaya poster

அப்போது நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, “இந்த படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷுக்கு வாழ்த்துகள். அதிதி ஷங்கருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நான் எந்த விழாவுக்கும் பெரிதாகப் போகமாட்டேன். ஆனால் இது என்னோட பேமிலி ஃபங்ஷன் மாதிரி. அதனால் வந்துவிட்டேன். 10-15 வருடங்களுக்கு மேலாகவே எனக்கு இயக்குநர் விஷ்ணுவை தெரியும். நிறைய நாளைக்குப் பிறகு ஒரு ஸ்வீட் லவ் ஸ்டோரி படம் வருகிறது என்று நினைக்கிறேன். விஷ்ணுவர்தனிடம் இருந்து ஆகாஷ் நிறையக் கற்றுக்கொள்வார்” என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய ஆகாஷ் முரளி, “நேரம் எடுத்து என்னுடைய படத்தின் போஸ்டரை வெளியிட்டதற்கு நன்றி. இது எனக்கு மறக்க முடியாத ப்ராஜெக்ட். இந்த படத்தில் நடிக்கும்போது உடம்பே நடுங்கும். அதிதிதான் என்னை கூல் பண்ணுவாங்க. என்னுடைய கதாநாயகன் விஷ்ணுவர்தன் சார்தான். நிறைய விஷயங்கள் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். விஷ்ணு – யுவன் கூட்டணியின் மூலம் சினிமாவில் அறிமுகமாவது எனக்குக் கூடுதல் ப்ளஸ். அம்மா, அண்ணா எனக்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி” என்று கூறினார்.

ஆர்யா

அதன் பிறகு பேசிய ஆர்யா, “விஷ்ணு கரியரில் 80 சதவீதம் நான்தான் படம் பண்ணிருக்கிறேன். படப்பிடிப்பில் நிறைய நாள் நயன்தாராகிட்ட திட்டு வாங்கியிருக்கிறேன். கொடுத்த பணத்தில் திறமையாகப் படம் எடுக்கக்கூடிய திறமை விஷ்ணுவர்தனுக்கு இருக்கிறது. சிறிய பட்ஜெட்டில் பிரமாண்டமான படத்தை அவர் கொடுப்பார். அவரிடம் பேசி ஜெயிக்கவே முடியாது.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.