What to watch on Theatre & OTT: Kalki 2898 AD, Paradise, A Quiet Place; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Kalki 2898 AD (தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம்)

Kalki 2898 AD

நாக் அஷ்வின் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பேன் இந்தியா அளவில் உருவாகியுள்ள திரைப்படம் `Kalki 2898 AD’. நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கமல் இதில் விசித்திரமான தோற்றத்தில் வில்லனாக நடிக்கிறார். தீபிகா படுகோன், திஷா பதானி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படம் மகாபாரத காலத்தில் ஆரம்பித்து கி.பி. 2898-ம் ஆண்டில் முடிவடைகிறது, கிட்டத்தட்ட 6000 ஆண்டுகள் நடக்கும் கதை இது. புராணக் கதைகளை வைத்து சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Paradise (தமிழ்)

Paradise

‘மெட்ராஸ் டாக்கிஸ்’ வெளியிட, பிரசன்னா வித்தனகே இயக்கத்தில் ரோஷன் மேத்தீவ், தர்ஷனா ராஜேந்திரன், ஷாம் ஃபெர்னாண்டோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Paradise’. திருமணமான காதல் ஜோடிகள் இலங்கைக்குச் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு நடக்கும் சம்பவங்கள் அவர்களின் வாழ்க்கையையே மாற்றுகின்றன. அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள். இலங்கை சுற்றுலா அவர்களின் வாழ்வில் எப்படியான புரிதலையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியது என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ஜூன் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

A Quiet Place – Day One (ஆங்கிலம்)

A Quiet Place – Day One

மைக்கேல் சர்னோஷ்கி இயக்கத்தில் லுபிடா நுயைங்கோ, ஜோசம் குய்ன், அலெக்ஸ் உல்ஃப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘A Quiet Place – Day One’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது ஜூன் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நேரடி ஓ.டி.டி ரிலீஸ்கள்

Sharmajee Ki Beti (இந்தி) – Amazon Prime Video

Sharmajee Ki Beti

தாஹிரா காஷ்யப் குரானா இயக்கத்தில் சாக்ஷி தன்வார், திவ்யா தத்தா, சயாமி கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sharmajee Ki Beti’. நடுத்தர குடும்பத்தினரின் கனவு, ஆசை, உறவுச் சிக்கல்கள் என சீரியஸான விஷயங்களை காமெடியுடன் பேசும் இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் உருவாகியுள்ளது.

Rautu Ka Raaz (இந்தி) – Zee5

Rautu Ka Raaz

ஆனந்த் சுரபூர் இயக்கத்தில் நவாசுதீன் சித்திக், ராஜேஷ் குமார், அதுல் திவாரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Rautu Ka Raaz’. பள்ளி வார்டனின் மர்மமான மரணத்தைச் சுற்றி நடக்கும் இன்வஸ்டிகேசன் க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

A Family Affair (ஆங்கிலம்) – Netflix

A Family Affair

ரிச்சர்ட் லாக்ராவனீஸ் இயக்கத்தில் நிக்கோல் கிட்மேன், ஜாக் எஃப்ரான், ஜோயி கிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘A Family Affair’. காதல், ரொமான்ஸ் என இளைஞர்களின் உறவுகளைப் பற்றி பேசும் இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Fancy Dance (ஆங்கிலம்) – Apple TV +

Fancy Dance

எரிகா ட்ரெம்ப்ளே இயக்கத்தில் லில்லி கிளாட்ஸ்டோன், மைக்கேல் ரோவ், பிளேன் ஆலன், இசபெல் டெராய்-ஓல்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Fancy Dance’. சிறந்த நடனக் கலைஞராக வேண்டும் என்ற தங்கையின் கனவிற்கு உறுதுணையாக நின்று தங்கையைச் சுற்றி நடக்கும் பிரச்னைகளை எதிர்கொள்கிறார் லில்லி கிளாட்ஸ்டோன். தாயாகவும், சகோதரியாகவும் தனது தங்கையைக் காப்பாற்றி, அவரது கனவிற்கு உறுதுணையாக லில்லி கிளாட்ஸ்டோன் இருந்தாரா, அவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்னைகளெல்லாம் வந்தன என்பதுதான் இதன் கதைகளம்.

இந்த வார வெப்சீரிஸ்கள்

The Bear (ஆங்கிலம்) – Disney + Plus Hotstar

The Bear

கிறிஸ்டோபர் ஸ்டோர் இயக்கத்தில் ஜெர்மி ஆலன் ஒயிட், எபோன் மோஸ்-பச்ராச், அயோ எடெபிரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘The Bear’. சமையல்காரரின் வாழ்வை மையமாகக் கொண்ட காமெடி தொடரான இதன் 3வது சீசன் ‘Disney + Plus Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Wonka (ஆங்கிலம்) – Apple TV+

Wonka

பால் கிங் இயக்கத்தில் டிமோதி சாலமேட், குஸ்டாவ் டை, முர்ரே மெக்ஆர்தர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Wonka’. மேஜிக் சாகசங்கள் நிறைந்த இத்திரைப்படம் ‘Apple Tv+ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

உயிர் தமிழுக்கு (தமிழ்) – Aha

உயிர் தமிழுக்கு

ஆதம் பாவா இயக்கத்தில் அமீர், சந்தினி, ஆனந்த் ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு’. அரசியல் நையாண்டி திரைப்படமான இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Bhaje Vaayu Vegam (தெலுங்கு)

Bhaje Vaayu Vegam

பிரசாந்த் ரெட்டி இயக்கத்தில் கார்த்திகேயா, ஐஸ்வர்யா மேனன், ராகுல் ஹரிதாஸ், ரவி ஷங்கர் உள்ளிடோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bhaje Vaayu Vegam’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Love Mouli (தெலுங்கு)

Love Mouli

அவனீன்ரா இயக்கத்தில் நவ்டீப், பன்ஃகுரி, சார்வி துத்தா, மிர்ச்சி ஹேமந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Love Mouli’. இத்திரைப்படம் ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Guruvayoor Ambalanadayil (மலையாளம்) – Disney + Hotstar

Guruvayoor Ambalanadayil

விபின் தாஸ் இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், பாசில் ஜோசப், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Guruvayoor Ambalanadayil’. திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் இளைஞர், தன்னைப் பிடிக்காத பெண்ணை திருமணம் செய்து உறவுச் சிக்கல்களில் மாட்டிக் கொள்வதை ஜாலியாகச் சொல்லியிருக்கும் இத்திரைப்படம் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Silent Night (ஆங்கிலம்) – Amazon Prime Video

Silent Night

காமில் கிரிஃபின் இயக்கத்தில் கெய்ரா நைட்லி, மேத்யூ கூட், ரோமன் கிரிஃபின் டேவிஸ் உள்ளிட்டோர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Silent Night’. காமெடி, ஹாரர் திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Civil War (ஆங்கிலம்) – Amazon Prime Video

Civil War

அலெக்ஸ் கார்லேண்ட் இயக்கத்தில் கிர்ஸ்டன் டன்ஸ்ட், வாக்னர் மௌரா, கெய்லி ஸ்பேனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Civil War’. நிஜமாகவே ஒரு சிவில் வார் தற்போது அமெரிக்காவில் நடந்தால் எத்தகைய பேரழிவை உண்டாக்கும் என்பதை மையப்படுத்திய வார் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.