சாண்டியாகோ,
வடக்கு சிலியின் கடற்கரை பகுதிக்கு அருகில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை 9.51 மணியளவில் வடக்கு சிலியின் கடற்கரை பகுதியில் 75.9 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டு நின்றனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Related Tags :