ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைவர் பிரிஜ்மோகன் லால் முன்ஜால் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் கரீஸ்மா XMR 210 பைக்கின் அடிப்படையில் Centennial கலெக்டர்ஸ் எடிசனை விற்பனைக்கு வெளியிட உள்ளது.
ஹீரோ டீலர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை துவங்கியுள்ள நிலையில் ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் காட்சிக்கு வந்த CE001 ஸ்பெஷல் எடிசன் சிறப்பு கார்பன் ஃபைபர் பாகங்களை கொண்டதாக வெறும் 100 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்க உள்ளது.
விற்பனையில் கிடைத்து வருகின்ற கரீஸ்மா அடிப்படையில் தயாரிக்கப்பட்டு செமி ஃபேரிங் செய்யப்பட்டு பிரத்தியேகமாக கார்பன் ஃபைபர் பாகங்கள் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
கரீஸ்மா Centennial பைக்கில் 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த பைக்கில் உள்ள பாகங்கள் அனைத்தும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில்முழுமையாக அட்ஜெஸ்டபிள் செய்யக்கூடிய அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ஒஹில்னஸ் மோனோஷாக் அப்சார்பர், ரேடியல் பிரேக் காலிப்பரை பெற்று Pirelli டயர்கள் கூடுதலாக, Akrapovic எக்ஸ்ஹாஸ்ட் பெற்றுள்ளது.
நாளை ஜூலை 1 ஆம் தேதி ஹீரோ நிறுவன தலைவர் பிரிஜ்மோகன் லால் முன்ஜால் பிறந்தநாள் என்பதனால் கரீஸ்மா நூற்றாண்டு விழா மாடல் ரூ.2 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.