பஜாஜ் பல்சரில் உள்ள N vs NS 160சிசி பைக்கின் ஒப்பீடு, எந்த மாடல் வாங்கலாம்.?

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் பைக் வரிசையில் இடம்பெற்றுள்ள N160 மாடலுக்கு எதிராக உள்ள NS160 என இரண்டையும் ஒப்பீடு செய்து என்ஜின் விபரம், மெக்கானிக்கல் அம்சங்கள், மைலேஊஃ மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை உள்ள அனைத்து அறிந்து கொண்டு எந்த பைக் வாங்கலாம் என அறிந்து கொள்ளலாம்.

Bajaj Pulsar N vs Pulsar NS வித்தியாசங்கள் என்ன ?

பஜாஜ் ஆட்டோவின் நேக்டூ ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் என அழைக்கப்படுகின்ற பல்சர் NS மாடல் கூடுதல் பவர், 4 வால்வுகளை கொண்ட என்ஜின் மற்றும் மாறுபட்ட டிசைனை பெற்றுள்ளது. நேக்டூ பல்சர் N பைக்கில் 2 வால்வுகளை கொண்ட என்ஜின், சற்று ரிலாக்ஸான ரைடிங் பொசிஷனை பெற்றுள்ளது.

2024 பஜாஜ் Pulsar N160 vs Pulsar NS160 என்ஜின் ஒப்பீடு

இரண்டு பல்சர் 160சிசி பைக்குகளும் மாறுபட்ட சிசி கொண்ட என்ஜின்களை பகிர்ந்து கொண்டு என்எஸ்160 மாடல் 17.2 Ps பவரை வழங்குகின்ற 4 வால்வுகளை பெற்றுள்ளது. அடுத்தப்படியாக என்160 மாடல் 16Ps பவரை வெளிப்படுத்துகின்ற இரண்டு வால்வுகளை பெற்ற என்ஜினை கொண்டுள்ளது.

Pulsar NS160 Pulsar N160
என்ஜின் 160.4cc single cyl oil cooled 164.82cc single cyl, Oil cooled
பவர் 17.2 PS 16 PS
டார்க் 14.6Nm 14.65Nm
கியர்பாக்ஸ் 5 speed 5 speed
மைலேஜ் 44 kmpl 47 kmpl

புதிதாக வந்த பல்சர் என்160 மாடலில்  வசதிகளாக டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் ரைடிங் மோடுகள் (Road, Rain and Offroad ) இடம்பெற்றுள்ளன. இந்த வசதியை என்எஸ்160 மாடல் பெறவில்லை.

2024-bajaj-pulsar-n160 என்எஸ் 160

இரு மாடல்களும் அப்சைடு டவுன் ஃபோர்க்கு வேரியண்ட்டை கொண்டுள்ள நிலையில் இரு மாடல்களும் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளன. கூடுதலாக சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ தனது மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ஸ்மார்ட்போன் இணைப்பின் மூலம் பெற்றுக் கொண்டுள்ளது.

மெக்கானிக்கல் அம்சங்கள்

2024 Pulsar NS160 2024 Pulsar N160
வீல்பேஸ் 1372mm 1358mm
இருக்கை உயரம் 805mm 795mm
கிரவுண்ட்
கிளியரண்ஸ்
170mm 165mm
எரிபொருள் டேங்க் 12 litres 14 litres
Kerb weight 152 kg 154kg
சஸ்பென்ஷன் (F/R) USD Fork /  Nitrox Monoshock USD Fork/ Telescopic 37mm or 31mm / Monoshock
பிரேக் (F/R) 300mm Disc/ 230mm Disc(Dual channel ABS) 300mm or 280 mm Disc / 230mm Disc(Dual channel ABS or Single Channel ABS)
டயர் (F/R) 100/80-17 (F) / 130/70-17 (R) 100/80-17 (F) / 130/70-17 (R)

பல்சர் என்எஸ் 160 மாடலில் உள்ள மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களுக்கு ஏற்ற வகையிலே என் 160 மாடலும் பெற்றிருந்தாலும், குறைந்த விலை டெலிஸ்கோபிக் ஃபோர்கினை பெற்ற மாடலும் என்160 பைக்கில் உள்ளது.

Bajaj Pulsar N160 with usd fork

Pulsar NS160 Vs N160 ஆன்ரோடு விலை ஒப்பீடு

கூடுதல் பவர் மற்றும் ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் வகையிலான மாடலை தேர்ந்தெடுக்க முடிவு செய்தால் அது நிச்சியமாக பல்சர் என்எஸ்160 பைக்கினை வாங்கலாம். டிசைனில் என்எஸ்200 போலவே என்எஸ் 160 மாடலும் அமைந்துள்ளது.

குறைந்த பவர் சற்று கூடுதலான மைலேஜ் ஆகியவற்றை விரும்பினால் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இரு ஆப்ஷனை பெற்று குறைந்த விலையில் துவங்குகின்ற பல்சர் N160 மாடலை வாங்கலாம்.

எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Pulsar NS160 ₹ 1.47 லட்சம் ₹ 1.72 லட்சம்
Pulsar N160 ₹ 1.23 – 1.34 லட்சம் ₹ 1.48 – ₹ 1.59 லட்சம்
Pulsar N160 USD ₹ 1.40 லட்சம் ₹ 1.65 லட்சம்

இந்த இரு பைக்குகளுக்கு போட்டியாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160, சுசூகி ஜிக்ஸர், பிரபலமான ஸ்போர்டிவ் யமஹா MT-15 மற்றும் ஹோண்டாவின் எஸ்பி 160 உள்ளிட்ட மாடல்களும் சந்தையில் கிடைக்கின்றன.

Bajaj Pulsar NS400Z Vs NS200 Vs NS160 Vs NS125

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.