ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 125R மோட்டார்சைக்கிள் பற்றி அடிக்கடி கேட்க்கப்படும் வினாக்களுக்கான விடைகளை அறிந்து கொள்வதுடன் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறியலாம்.
இந்தியாவின் 125cc பைக்கில் உள்ள போட்டியாளர்கள் யார் ?
ஃபேமிலி தோற்றம் மற்றும் ஸ்போர்ட்டிவ் என இருவிதமான பிரிவுகளிலும் உள்ள 125சிசி பைக்குகளில் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கிற்கு போட்டியாக டிவிஎஸ் ரைடர், பஜாஜ் பல்சர் NS125, மற்றும் ஹோண்டா SP125 என மூன்று மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் எத்தனை வேரியண்டுகள் உள்ளன ?
கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்றுள்ள IBS வேரியண்ட் மற்றும் முன்புறத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற ABS என இருவிதமான வேரியண்டுகளை பெற்று 125சிசி சந்தையில் முதன்முறையாக இந்திய சந்தையில் ஏபிஎஸ் பெற்ற மாடலாக எக்ஸ்ட்ரீம் 125R விளங்குகின்றது.
பின்பக்கத்தில் இரு வேரியண்டிலும் பொதுவாக 130மிமீ டிரம் பிரேக் பெற்று உடன் இன்ட்கிரேட்டேட் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட வேரியண்டின் முன்புறம் 240 மிமீ டிஸ்க் மற்றும் முன்புறம் 276 மிமீ டிஸ்க் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆனது இடம்பெற்றுள்ளது.
ஹீரோ Xtreme 125R மைலேஜ் எவ்வளவு ?
124.7cc ஏர்-கூல்டு 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 8,250 rpm-ல் 11.40 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ள நிலையில் எக்ஸ்ட்ரீம் 125ஆர் மைலேஜ் லிட்டருக்கு 66 கிமீ (ARAI) தெரிவித்துள்ளது. நிகழ்நேரத்தில் நெடுஞ்சாலை பயணத்தில் லிட்டருக்கு 62 கிமீ வரையும், நகர்ப்புறங்களில் 52-55 கிமீ வரை கிடைப்பதனால் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 58 கிமீ வரை கிடைக்கின்றது.
எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் உள்ள நிறங்கள் எத்தனை ?
125சிசி எக்ஸ்ட்ரீம் மாடலில் நெக்ட்டிவ் எல்.சி.டி கிளஸ்ட்டரை பெற்று கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டுள்ள பைக்கில் நீலம், கருப்பு, மற்றும் சிவப்பு என மூன்று நிறங்கள் உள்ளது.
எக்ஸ்ட்ரீம் 125ஆர் நுட்பவிபரங்கள் என்ன ?
794 மிமீ இருக்கை உயரம், 180 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றுள்ள எக்ஸ்ட்ரீம் 125ஆரில் 37 மிமீ டெலஸ்கோபிக் ஃபோரக் மற்றும் மோனோ ஷாக் அப்சார்பருடன் அமைந்துள்ளது.
136 கிலோ கெர்ப் எடை கொண்டுள்ள பைக்கின் முன்புறத்தில் 90/90 – 17 மற்றும் பின்புறத்தில் 120/80 – 17 ட்யூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்களை விட எக்ஸ்ட்ரீம் 125ஆர் சிறந்த மாடலா.?
பல்சர் என்எஸ்125 மற்றும் ரைடர் 125 என இரு மாடலை போல சற்று கூடுதலான ஆக்சிலிரேஷன் இல்லை என்றாலும், சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையிலான இருக்கை, ஸ்போர்ட்டிவ் லுக், எல்இடி ஹெட்லைட் வெளிச்சம் சற்று கூடுதலாக இருந்திருக்கலாம். மற்றபடி போட்டியாளர்களை விட சிறந்த மைலேஜ் மற்றும் டிசைன், சஸ்பென்ஷன் அனுபவம் உள்ளிட்ட மற்ற அனைத்திலும் எக்ஸ்ட்ரீம் 125ஆர் சிறந்து விளங்குகின்றது.
2024 Hero Xtreme 125R on-Road price in Tamil Nadu
2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R மாடலின் ஆன்-ரோடு விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.23 லட்சம் வரை அமைந்துள்ளது.