நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலியும், தொடர் நாயகன் விருதை பும்ராவும் வென்றுள்ளனர். கடைசியாக கடந்த 2013-ல் இந்திய அணி ஐசிசி தொடரை வென்றிருந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐசிசி தொடரை வென்றுள்ளது.

திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் இந்த வெற்றியைக் கொண்டாடி, இந்திய அணி வீரர்களுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில் சமீபத்தில் `Kalki 2898 AD’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ள நடிகர் அமிதாப் பச்சன், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துத் தெரிவித்து, தான் இறுதிப் போட்டியைப் பார்ப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
T 5057 – Tears flowing down .. in unison with those that TEAM INDIA sheds ..
WORLD CHAMPIONS INDIA
भारत माता की जय
जय हिन्द जय हिन्द जय हिन्द— Amitabh Bachchan (@SrBachchan) June 29, 2024
அதில், “உலக சாம்பியன்கள்… இந்தியா!!! T20 WORLD CUP 2024. உற்சாகம் மற்றும் உணர்ச்சிகள் மற்றும் அச்சம் என எல்லா உணர்வுகளும் உச்சத்தில் இருந்த தருணம். எல்லாம் நல்லபடியாக முடிந்து கோப்பையை வென்றெடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ஆனால், நான் எப்போதும் போல இந்த இறுதிப் போட்டியைப் பார்க்கவில்லை. நான் இறுதிப் போட்டியைப் பார்த்தால் இந்திய அணி தோற்றுவிடும் என்ற அச்சம் எனக்குள் எப்போதும் உண்டு. நம் கிர்க்கெட் வீரர்கள் மைதானத்தில் சிந்திய கண்ணீர் நம் கண்களிலும் நீராய் ஓடியது” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்திய அணியின் வெற்றி குறித்து ‘Blog’ தளத்தில் எழுதியிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.