‘பிஹார் அரசுக்கு பாஜக தலைமை ஏற்க வேண்டும்’ – அஸ்வின் குமார் சவுபே கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி: பிஹார் அரசுக்கு பாஜக தலைமை ஏற்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் அஸ்வின் குமார் சவுபே தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்தால், பிஹார் மாநில அரசியலில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவால் மீண்டும் ஆட்சி மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜகவை விடக் குறைந்த தொகுதிகள் பெற்ற இண்டியா கூட்டணியும் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. … Read more

கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டத் திருத்தம்… தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றம் …

கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது . கள்ளச்சாராயம் தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனையோடு ₹10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. கள்ளச்சாராய விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்கள் மூடி சீலிடப்படும் விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி … Read more

Maamannan: சமூக நீதியை ஓங்கிப் பேசிய மாமன்னன் வெளியாகி ஒருவருசம் ஆச்சா.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் சொற்பமான இயக்குநர்கள் மட்டுமே தங்களது படங்கள் மூலம் சமூக நீதி கருத்துக்களை பேசுகின்றனர். அவர்களில் ஒருவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இயக்குநர் ரஞ்சித்தின் முதல் தயாரிப்பு படமான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தனது அறிமுக படத்திலேயே

Rohit Sharma: "நாங்கள் இதற்காகக் கடினமாக உழைத்திருக்கிறோம்!" – சாதனை கேப்டன் ரோஹித் பெருமிதம்

டி20 உலகக்கோப்பையை வென்று ரசிகர்களின் ஏக்கத்தைத் தீர்த்திருக்கிறது இந்திய அணி. கபில்தேவுக்கும் தோனிக்கும் பிறகு உலகக்கோப்பையை வென்ற கேப்டன்கள் எனும் பட்டியலில் தன்னுடைய பெயரையும் இணைத்திருக்கிறார் ரோஹித் சர்மா. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இனி ரோஹித்தின் பெயரும் உச்சத்தில் வைத்து கொண்டாடப்படும். உலகக்கோப்பையை வாங்கிவிட்டு ரோஹித் பேசிய வெற்றி உரை நெகிழ்ச்சிமிக்கதாக இருந்தது. Team India ரோஹித் சர்மா பேசியவை இங்கே… “கடந்த நான்கு வருடங்களாக நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். அதற்கான ரிசல்ட்தான் இன்று கிடைத்திருக்கிறது. நாங்கள் … Read more

கள்ளச் சாராய சம்பவம்: திமுக எம்எல்ஏ-க்கள் மன்னிப்புக் கோர ராமதாஸ், அன்புமணி பதில் நோட்டீஸ்

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் ஆளுங்கட்சியினரை தொடர்புபடுத்தி பேசியதாக தலா ரூ.1 கோடி நஷ்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பிய திமுக எம்எல்ஏ-க்கள் இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சார்பில் பதில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷத்தன்மை கொண்ட கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள்ளச் சாராய வியாபாரிகளுக்கும், தங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக்கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் … Read more

“நீதித்துறையை அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் மம்தா பானர்ஜி பேச்சு

கொல்கத்தா: நீதித்துறையை அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பங்கேற்ற நீதித்துறை தொடர்பான மாநாட்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். நீதித்துறையின் தற்கால வளர்ச்சிகள் குறித்த மாநாடு கொல்கத்தாவில் இன்று (ஜூன் 29) நடைபெற்றது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய மம்தா பானர்ஜி, “நீதித்துறை எங்களுக்கு … Read more

விராட் கோலி ஓய்வு அறிவிப்பு…. இனி இந்திய அணிக்காக ஆடமாட்டார்..!

டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற கையோடு இந்த பார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் விராட் கோலி. பார்படாஸில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போட்டியில் 76 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய விராட் கோலி, டி20 … Read more

“வரும் காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை” சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்தம் செய்து தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “வரும் காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. விஷச் சாராயம் மட்டுமில்லாமல், போதைப் பொருள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட … Read more

ஏழைங்கனா இளக்காரமா.. 500 ரூபாய் பெட் கட்டி விளையாட்டு.. தொகுப்பாளினி ஜாக்குலினை விளாசும் ரசிகர்கள்!

 சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினை சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். ஏழை மக்களிடம் இப்படியா 500 ரூபாய் பெட் வச்சு விளையாடுவது? என கேள்விகளால் விளாசி எடுத்து வருகின்றனர். அப்படி ஜாக்குலின் பண்ண விஷயம் என்ன? அதற்கு நெட்டிசன்கள் கொடுத்து வரும் பதிலடி என்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

Virat Kohli: "இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன்!" – வெற்றியோடு டி20-லிருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலி!

17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று சாதித்திருக்கிறது. இப்படியொரு மாபெரும் தருணத்தில் இந்திய அணியின் முக்கிய வீரரான விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக ஆகச்சிறந்த இன்னிங்ஸை ஆடி ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு ஓய்வை அறிவித்திருக்கிறார் கோலி. Virat விராட் கோலி பேசுகையில், “இதுதான் என்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை. இதுதான் இந்தியாவுக்காக என்னுடைய கடைசி டி20 ஆட்டம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினேன். … Read more