3 ஆண்டுகளில் திமுக எத்தனை மதுபானக் கடைகளை மூடியுள்ளது? – தினகரன் கேள்வி

சென்னை: ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் இதுவரை எத்தனை மதுபானக் கடைகளை மூடியிருக்கிறது என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “ஆட்சிக்கு வருவதற்கு முன்பு படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் இதுவரை எத்தனை மதுபானக்கடைகளை மூடியிருக்கிறது? சட்டமன்றத்தில் மூத்த அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் … Read more

“லடாக்கில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நாடு நினைவில் கொள்ளும்” – ராகுல் காந்தி

புதுடெல்லி: “பயிற்சியின் போது ஆற்றில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. நாடு அவர்களின் தியாகத்தை, அர்ப்பணிப்பை எப்போதும் நினைவில் கொள்ளும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் இந்தியில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லடாக்கில் ராணுவப் பயிற்சியில் டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. … Read more

டி20 உலகக்கோப்பை : இந்தியா சாம்பியன்… மில்லர் கேட்ச் தான் டர்னிங் பாயிண்ட்..!

20 ஓவர் உலகக்கோப்பையின் சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. வெஸ்ட் இண்டீஸின் பர்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது. 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த உலகக்கோப்பையை வென்று மீண்டும் ஒரு சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியிருக்கிறது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் … Read more

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா… விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியின் இறுதியாட்டம் பார்படாஸில் இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க … Read more

கை கால் விழுந்துடுச்சி.. மகள் சாப்பாட்டுகே கஷ்டப்படுறா.. கண்கலங்கி பேசிய வெங்கல் ராவ்!

சென்னை: நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்த நடிகர் வெங்கல் ராவ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பல நடிகர்கள் உதவி செய்துள்ள நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், தனது வாழ்க்கையில் நடந்த சோகத்தை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நகைச்சுவை

Anant Ambani: வெள்ளி கோயில்; தங்கச் சிலைகள்; ஆச்சரியப்படுத்தும் அம்பானி வீட்டுத் திருமண அழைப்பிதழ்

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டிற்கும் வரும் ஜூலை 12ம் தேதி திருமணம் செய்து வைக்கிறார். இத்திருமண ஏற்பாடுகள் மிகப்பெரிய அளவில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. முதலில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் என்று கூறி கடந்த மார்ச் மாதம் இறுதியில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மிகப்பெரிய அளவில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு உலகம் முழுவதும் இருந்து தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர், பாலிவுட் நட்சத்திரங்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். … Read more

மாணவர்களுக்கு தரமான மிதிவண்டிகள் வழங்கல்: தமிழக அரசு விளக்கம்

சென்னை: மாணவார்களுக்கு தரமான மிதிவண்டிகளை வழங்கி வருவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. சனிக்கிழமை (ஜூன் 29) அன்று மாணவர்களுக்கு அரசு வழங்கும் மிதிவண்டிகளின் தரம் குறைந்துள்ளதால், இலவசமாக வழங்கப்பட்ட மிதிவண்டிகளை விற்பனை செய்கிறார்கள் என்று தவறான செய்தி வெளிவந்துள்ளது. மாணவ, மாணவியர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் இலவச மிதிவண்டிகள் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் … Read more

“எமர்ஜென்சியில் எங்களை சிறையில் தள்ளினர்… ஆனால், துன்புறுத்தவில்லை” – பாஜகவுக்கு லாலு பதிலடி

பாட்னா: ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் எமர்ஜென்சி நாட்களை நினைவுகூர்ந்து குறிப்பிட்டுள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எங்களை எமர்ஜென்சி காலத்தில் சிறையில் போட்டிருந்தாலும் கூட எங்களை இந்திரா காந்தி துன்புறுத்தவில்லை” என்று அவர் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் அவர் “The Sangh Silence in 1975” என்ற தலைப்பில் தானும் … Read more

பராமரிப்பு பணி காரணமாக தென் சென்னையின் பல பகுதிகளுக்கு நாளை முதல் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்…

தென் சென்னையின் பல்வேறு பகுதிகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் நிறுத்தப்படும் என்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதிய அளவு குடிநீரை சேமித்து வைக்க வேண்டும் என பொதுமக்களை வலியுறுத்தியுள்ள குடிநீர் வாரியம் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று மண்டலங்களுக்கு அவசரச் சூழ்நிலையில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் … Read more

''ஆசையும், பேராசையும் கலந்த கரு'' சுந்தர் சியின் ஒன் டூ ஓன் டிரைலர் வெளியானது!

சென்னை: த்ரிஷா நடிப்பில் வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை இயக்கிய திருஞானத்தின் இரண்டாம் படம் தான் ஒன் டூ ஒன். இந்த படத்தில் சுந்தர் சி மற்றும் அனுராக் கஷ்யப் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து மிரட்டலான டிரைலர் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளக்கி