விருந்தினர்களுக்கு ரூ.66,000 ரொக்கம், ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம்; அம்பானியை மிஞ்சும் சீனத் திருமணம்!

சீனாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றின் வீடியோக்களும், அதுகுறித்த செய்திகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ஜூலை 12-ம் தேதி ராதிகா மெர்ச்சென்ட்டை கரம் பிடிக்க இருக்கிறார். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரிலும் வெளிநாடுகளிலும் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. குஜராத்தில் நடைபெற்ற அந்த மூன்று நாள் நிகழ்ச்சிக்கு மட்டுமே கிட்டத்தட்ட ரூ.1,250 கோடி செலவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. சீனத் திருமணம் திருமண தேதி … Read more

குட்டி பத்மினிக்கு எதிரான மோசடி வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்

சென்னை: பாஜக நிர்வாகியும், நடிகையுமான குட்டி பத்மினிக்கு எதிரான மோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கத்தில், ரமேஷ் என்பவருக்கு சொந்தமான சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபு பாஷா என்பவரின் மனைவி இம்ரானா என்பவருக்கு விற்றதாகக் கூறி, நடிகையும், பாஜக நிர்வாகியுமான குட்டி பத்மினிக்கு எதிராக, கடந்த 2011-ம் ஆண்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பதிவு … Read more

“பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜார்க்கண்டில் பாஜக துடைத்தெறியப்படும்” – ஹேமந்த் சோரன்

ராஞ்சி: சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜார்க்கண்ட்டில் இருந்து பாஜக துடைத்தெறியப்படும் என்று அம்மாநில முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ராஞ்சியில் தனது இல்லத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ஹேமந்த் சோரன், “எனக்கு எதிராக பாஜக சதித்திட்டம் தீட்டியது. அதன் காரணமாகவே நான் சிறை செல்ல நேர்ந்தது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜார்க்கண்ட்டில் இருந்து காவிக் கட்சி துடைத்தெறியப்படும். வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில், சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு எதிரான கிளர்ச்சி … Read more

Raghava Lawrence: வெற்றிமாறன், லோகேஷ் ஸ்கிரிப்ட், `காஞ்சனா 4 – துர்கா' – ராகவா லாரன்ஸ் லைன் அப்!

கார்த்திக் சுப்புராஜின் `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பின் மகிழ்ச்சியில் இருக்கிறார் ராகவா லாரன்ஸ். அடுத்தும் வித்தியாசமான கதைகள் ப்ளஸ் இயக்குநர்களோடு கைகோர்த்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் ‘காஞ்சனா’ பாகங்களுக்குப் பின்னர் டைரக்‌ஷனுக்கு பிரேக் கொடுத்துவிட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் ராகவா லாரன்ஸ். சத்யஜோதி தயாரிப்பில் வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘ஹண்டர்’ என்ற படத்தில் கமிட் ஆனார். விஷாலை வைத்து ‘அயோக்யா’வை கொடுத்த இயக்குநர் இவர். இதனை அடுத்து சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’, கார்த்தியின் ‘சுல்தான்’ … Read more

ரிலையன்ஸ் ஜியோ அதிபர் அம்பானியின் அடுத்த சுற்று கொண்டாட்டம்… மகன் திருமணத்துக்கு முன் ஏழை ஜோடிகளுக்கு திருமணம்…

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான ப்ரீ வெட்டிங் ஈவென்ட்டுகள் உலகளவில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ள கடந்த சில மாதங்களுக்கு முன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சொகுசு கப்பலில் இரு குடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்ட மற்றொரு கொண்டாட்டம் இடம்பெற்றது. தற்போது ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு … Read more

கஸ்தூரி உனக்கு அசிங்க அசிங்கமா சாவு வரும்.. மீண்டும் களமிறங்கிய பாடகி சுசித்ரா!

சென்னை: பாடகி சுசித்ரா, தனது முன்னாள் கணவன் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் என பல நடிகர்கள் குறித்து மோசமான கருத்தை தெரிவித்து இருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகை கஸ்தூரி, சுசித்ராவிற்கு தற்போது மருத்துவ உதவியோ அல்லது மனநல உதவியோ ஏதோ ஒன்று தேவை என்று பேசி இருந்தார். இது குறித்து ஒரு மாதத்திற்கு பின்

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது போயிருந்தால் இலங்கை மற்றுமொரு கென்யாவாக மாறியிருக்கும்

காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கும் பொருளாதார வலுவற்ற ஆப்பிரிக்க பிராந்திய நாடுகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறான நிவாரணங்களை எதிர்பார்க்காமல் உள்நாட்டுக் கடனை முகாமைத்துவம் செய்துக்கொண்டு முன்னோக்கி பயணிப்பதற்கான இயலுமையும் திறனும் இலங்கைக்கு உள்ளது. காலநிலை மாற்றத்தை கையாள்வதற்கான பிராந்திய தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள இலங்கை தயாராக உள்ளது – ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் விழா – 2024 இல் ஜனாதிபதி தெரிவிப்பு. பொருளாதாரப் பிரச்சினை காரணமாக கென்யா பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதனால் கொலைகளும் … Read more

T20 World Cup Final: "இந்தப் போட்டியிலும் அது நடக்க வேண்டும்!" – டாஸில் ரோஹித் சர்மா சொன்ன மெசேஜ்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி தொடங்கியிருக்கிறது. டாஸை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வென்றிருக்கிறார். டாஸில் இரண்டு அணிகளின் கேப்டன்களும் பேசியவை இங்கே. Rohit Sharma டாஸில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியவை, “நாங்கள் முதலில் பேட் செய்கிறோம். இது நல்ல பிட்ச்சாக தெரிகிறது. இங்கே ஒரு போட்டியில் ஆடியிருக்கிறோம். இங்கே நல்ல ஸ்கோர்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு மாபெரும் தருணம். ஆனாலும் நாங்கள் பதற்றப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும். இதை … Read more

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் ஆவணங்கள் கோரியவர் 3 ஆண்டாக இழுத்தடிப்பு: சென்னை ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஆவணங்கள் கோரி விண்ணப்பித்தவரை 3 ஆண்டுகளாக அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் இழுத்தடித்து வருவது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட செஞ்சி தாலுகா பெரியாமூரில் பச்சையப்பன் என்பவரின் தாயாருக்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு கூட்டுப்பட்டா உள்ள நிலையில் திடீரென அதில் 96 சென்ட் நிலம் புகழேந்தி என்பவரது பெயருக்கு மாறியிருப்பது … Read more

லோகோ பைலட்டுகளின் குறைகளை சரிசெய்ய ரயில்வே அமைச்சரிடம் தமிழக எம்பிக்கள் நேரில் வலியுறுத்தல்

புதுடெல்லி: ரயில்வே துறையின் லோகோ பைலட்டுகளின் குறைகளை சுட்டிக் காட்ட இன்று (சனிக்கிழமை) ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, தமிழக எம்பிக்கள் சந்தித்தனர். இதில், மதுரையின் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லின் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் இடம் பெற்றனர். இந்தச் சந்திப்பில் அமைச்சர் அஸ்வினியிடம் பேசியதாக எம்பிக்களான சு.வெங்கடேசன், ஆர்.சச்சினாந்தம் கூறியது: இந்திய ரயில்வேயில் உள்ள லோகோ பைலட்கள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்புப் பிரச்சினைகள் உள்ளன. இதன் மீது தெற்கு ரயில்வேயில் உள்ள லோகோ பைலட்களின் போராட்டத்தையும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு … Read more