ஆப்கன் பெண்களின் உரிமைகள் என்பது உள்நாட்டுப் பிரச்சினை: தலிபான் அரசு

காபூல்: ஆப்கன் பெண்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகள், தங்களது உள்நாட்டுப் பிரச்சினை என்று தலிபான் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2021-ல் தலிபான்கள் ஆப்கனிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில், தலிபான்களின் அரசை எந்த ஒரு நாடும் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், ஆப்கனுடன் சர்வதேச ஒருங்கிணைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் ஐநா முக்கிய முன்னெடுப்பை எடுத்தது. தோஹாவில் நடைபெற்ற அந்தச் சந்திப்பில் பங்கேற்க, ஆப்கனின் பல்வேறு பிரதிநிதிகளுக்கு … Read more

T20 Worldcup Final : டாஸிலேயே இந்திய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம், கோப்பை கன்பார்ம்

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்கியுள்ளது. டாஸ் வெற்றி பெற்ற கேப்டன் ரோகித் சர்மா சற்றும் யோசிக்காமல் பேட்டிங் தேர்வு செய்வதாக அறிவித்தார். ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியே வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா கேப்டன் மார்ஷ், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் ஆகியோர் டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை தேர்வு செய்தனர். இது … Read more

Cinema Roundup: ரஜினி – சூர்யா நேருக்கு நேர்; நடராஜன் பயோபிக் அப்டேட் – இந்த வார சினிமா தகவல்கள்!

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம். வேட்டையனுடன் மோதும் கங்குவா: ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் தயாராகி வருகிறது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன் எனப் பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. இத்திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறதென இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா முன்பே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், ரீலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில் ஒருவேளை அக்டோபர் 10-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகலாம் எனவும் … Read more

நீட் கேள்வித் தாள் கசிவு விவகாரம் தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ ரெய்டு…

நீட்-யுஜி தாள் கசிவு வழக்கில் குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனந்த், கெடா, அகமதாபாத் மற்றும் கோத்ரா ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS, BDS, AYUSH மற்றும் மருத்துவம் தொடர்புடைய பிற படிப்புகளுக்கான சேர்க்கைக்காக NTA ஆல் NEET-UG தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி வெளிநாடுகளில் 14 … Read more

ரஜினி மகளை திருமணம் செய்யவிருந்த ஜெயம் ரவி.. வளைத்துப்போட்ட மாமியார்..ரகசியத்தை சொன்ன பிரபலம்!

சென்னை: கடந்த சில வாரங்களாக ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து செய்தி தான் இணையத்தில் பேசு பொருளாக உள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கிவிட்டார். இதுகுறித்து சினிமா பத்திரிகையாளர் சபிதா ஜோசப்  வீடியோவில் பேசி உள்ளார். அண்மையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் சபிதா ஜோசப், நடிகர்

வடக்கையும் பொருளாதாரத்தில் மேம்பட்ட மாகாணமாக மாற்றுவதே ஆசை

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபன் ஆகியோரின் தலைமையில்  (27/06/2024 ) நடைபெற்ற போதே வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.    தொழில் அற்றோர் பிரச்சினைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்வு திட்டங்கள் தொடர்பிலும், வாழ்வாதார உதவி திட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட்டார்.    ஏனைய மாகாணங்களைப் போல … Read more

சென்னை: புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் அறுந்து விபத்து – ஒருவர் பலி

சென்னை, புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு சுமார் 112 கோடி ரூபாய் செலவில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகள் தரமற்றதாக இருப்பதாக அந்த குடியிருப்பில் உள்ள மக்கள் புகார் அளித்ததை அடுத்து, இதுபற்றிய விவாதங்கள் அப்போதைய சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. அதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி நிறுவனம் அங்கு ஆய்வு மேற்கொண்டதில் தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொண்டுதான் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது தெரியவந்தது. இது பெரும் … Read more

“தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை எனில் அரசு பதவி விலக வேண்டும்” – அன்புமணி காட்டம்

சென்னை: “புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை தள்ளிப்போடக் கூடாது. மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை. மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும். உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியை சுமத்துவது கண்டிக்கத்தக்கது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக … Read more

சிபிஐ தொடர்ந்த வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல்

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஜூலை 12 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிபிஐ கடந்த 26ம் தேதி கைது செய்தது. அன்றைய தினமே அவர் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட … Read more

ரச்சிதா மகாலட்சுமி நடிக்கும் புதிய படம்! பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு!

KS Ravikumar: இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் துவங்கியது!