88 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத கனமழை: டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து ஒருவர் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்தகனமழை காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தின் முதலாவது டெர்மினலின் மேற்கூரை நேற்று அதிகாலை 5.30 அளவில் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினரும், போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அங்கிருந்த கார்கள் நசுங்கிசேதமாயின. இதில் காருக்குள்சிக்கியிருந்தவர்களை தீயணைப்புப் படையினர் மீட்டனர். மேற்கூரை இடிந்து … Read more

சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் 'கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்' – அறிமுக விழா!

Karma Fate Conquering Sutras : சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் ‘கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்’ – அறிமுக விழா! சென்னையில் அறிமுகப் பிரதியை சுஹாசினி  மணிரத்னம் வெளியிட்டார்!

Varalaxmi Marriege: குடும்பத்தோடு பிரதமரைச் சந்தித்த சரத்குமார்! வரலஷ்மி கல்யாணத்துக்கு அழைப்பு!

டெல்லி: தமிழ் சினிமாவில் தற்போது கல்யாண குஷியில் உள்ள நடிகை என்றால் அது நடிகர் சரத்குமாரின் மகள் வரலஷ்மி சரத்குமார்தான். சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கும் அவரது காதலர் நிக்கோலாய் சச்தேவுக்கும் இருவருக்கும் நிச்யதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. குறிப்பாக வரலஷ்மியின் காதலர் நிக்கோலாய் சச்தேவ் ஏற்கனவே திருமணம் ஆகி

ஓடும் ரெயிலில் இருந்து திடீரென கழன்ற பெட்டிகள்: வேகம் குறைவால் பெரும் விபத்து தவிர்ப்பு

திருவனந்தபுரம், கேரள மாநிலம் எர்ணாகுளம்-ஜார்கண்ட் மாநிலம் டாடா நகர் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டு திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை கடந்து வந்து கொண்டிருந்தது. ரெயிலில் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. அதில் 1500-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். காலை 10 மணியளவில் வள்ளத்தோடு ரெயில் நிலையம் அருகே வந்த போது, அங்குள்ள பாலத்தை ரெயில் கடந்து செல்ல வேண்டி இருந்தது. இதனால் … Read more

ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் போட்டி: அரையிறுதியில் மேடிசன் கீஸ் அதிர்ச்சி தோல்வி

லண்டன், ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், கனடா வீராங்கனை லைலா ஆன்னி பெர்னாண்டசுடன் மோதினார். இதில் முதல் செட்டில் 3-6 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்ட மேடிசன் கீஸ் 2வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற 3வது செட்டில் கனடா வீராங்கனை லைலா ஆன்னி பெர்னாண்டஸ் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் … Read more

சீனா செல்ல வேண்டாம்: தைவான் அரசாங்கம் எச்சரிக்கை

தைபே நகரம், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா துடிக்கிறது. மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே தைவான் எல்லையில் போர் விமானங்கள் மற்றும் கப்பலை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் தைவான் ஜனநாயகத்தை ஆதரித்து வருபவர்களை தூக்கிலிடுமாறு வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சீனா மற்றும் … Read more

தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது: தவெக தலைவர் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து பாராட்டி ஊக்கத் தொகையை வழங்கி வந்தார். இந்நிலையில் அவர், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய பின்னர் … Read more

தேசிய தேர்வு முகமை மறுசீரமைப்பு: மாணவர், பெற்றோரிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு

புதுடெல்லி: நடப்பாண்டுக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது.இதையடுத்து, அந்த தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தநிலையில், என்டிஏ-வில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துமாணவர்கள், பெற்றோர்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வினாத் தாள் கசிவு, கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டது தொடர்பான பல்வேறு முறைகேடுகள் இந்த ஆண்டுக்கான … Read more

தமிழக முதல்வர் விரைவில் அமெரிக்கா பயணம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். இன்று சட்டசபை கூட்டத்தொடரில் தொழில்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு தமிழக் அமைச்சர் டி ஆர் பி ராஜா பதில் அளித்தார் அப்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ”தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆண்டுக்கு 10 லட்சம் என்ற அடிப்படையில், 31 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார். அந்த வரிடையில் விரைவில் 50வது சிப்காட் பூங்காவை முதல்வர் தொடங்கி வைப்பார். தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழக … Read more

மனோகரியை வலை வீசி தேடும் ரவுடிகள்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழிலுக்கும் மனோகரிக்கும் ஜாதகர் பொருத்தம் பார்க்க ஜோசியர் வீட்டிற்கு வந்து பத்து பொருத்தமும் சரியா இருக்கு என்கிறார். இதையடுத்து, சாமியாராக வரும் ராமையா பொருத்தம் இல்லை பரிகாரம் செய்ய வேண்டும்