88 ஆண்டுகள் இல்லாத மழை… வெள்ளத்தில் தத்தளிக்கும் தலைநகர்

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. சுட்டெரிக்கும் வெப்பத்துக்கு மத்தியில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவியதால் குடியிருப்புவாசிகள் சிரமப்பட்டனர். கோடை வெப்பம் எப்போது தணியும், மழை எப்போது பெய்யும் என்று டெல்லிவாசிகள் காத்திருந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து, வெப்பத்தை குறைத்திருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பிறகு வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் … Read more

இறுதிப்போட்டியில் இந்திய அணி இந்த ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும் – சோயப் அக்தர்

பார்படாஸ், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிஆட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் இந்த தொடரில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இதைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து இந்திய அணி கோப்பையை வெல்லுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை இந்தியா தோற்கடித்த விதத்தை பார்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு இந்நேரம் கொஞ்சம் பயம் ஏற்பட்டிருக்கும் … Read more

டிரம்ப் உடனான விவாதத்தில் திணறல்… அதிபர் வேட்பாளர் ஜோ பைடனை மாற்ற முயற்சி?

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன்(வயது 81) களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்(வயது 78) களமிறங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். இந்த விவாத நிகழ்ச்சிகளின்போது வெளியுறவு … Read more

நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு உடனே ஒப்புதல் தர வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: நீட் தேர்வை தேசிய அளவில் முற்றிலுமாக அகற்ற வேண்டும், நீட்விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல்அளிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்மொழிந்தார். அவர் பேசியதாவது: கடந்த 2017-ம் ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட்தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது. … Read more

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: பிரதமர் மோடி ஜூலை 2-ம் தேதி பதில்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நாடாளுமன்ற வழக்கப்படி, குடியரசுத் தலைவர் உரைக்குநன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தனித்தனியாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும். இதன்படி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மக்களவையில் பிரதமர் மோடி ஜூலை 2-ம் தேதி பதில் அளிப்பார் என … Read more

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலத்தில் எரிபொருள் கசிவு: சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல்

ஃபுளோரிடா: சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால், அதை சரிசெய்வதில் 2 வாரத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளது. விண்கலத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சி ஜூலை 2-ம் தேதிக்குபின் மேற்கொள்ளப்படும் நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களைஅனுப்ப ‘ஸ்டார்லைனர்’ என்றகேப்சூல் விண்கலத்தை போயிங்நிறுவனம் தயாரித்தது. பரிசோதனை முயற்சியாக இந்த ஸ்டார்லைனர் விண்கலம் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து கடந்த 5-ம் தேதி … Read more

தலைமறைவாக இருந்த பயங்கரவாதி சென்னையில் கைது

சென்னை சென்னை கோயம்பேட்டில் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அனோவர் என்ற பயங்கராவதி உபா சட்டத்தில் தேடப்பட்டு வந்தவர் ஆவார்  இன்று பயங்கரவாதி அனோவர் கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அனோவர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் இவர் அன்சார் அல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்காளத்தில் இருந்து தலைமறைவாகி சென்னையில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த அனோவரை மேற்கு வங்காள காவல்துறையினர் கைது … Read more

அடக்கடவுளே.. 36 வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை.. பிரார்த்தனை பண்ண கோரிக்கை!

மும்பை: பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே சமீபத்தில் கர்ப்ப வாய் புற்றுநோயால் மரணம் அடைந்து விட்டதாக புரமோஷன் செய்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான நிலையில், நிஜமாகவே தற்போது நாகினி நடிகை மார்பக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதை அறிவித்துள்ளார். இந்தி சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஹினா கான்.

மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம்

புதுடெல்லி, மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக வினய் குவாத்ரா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் ஜூலை 14-ம் தேதி முடிவடைய உள்ளது.இந்நிலையில், புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகராக இருந்து வருகிறார்.1989-ம் ஆண்டு பிரிவு ஐ.எப்.எஸ். அதிகாரியான விக்ரம் மிஸ்ரி ஜூலை 15-ம் தேதிமுதல் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்பை ஏற்கவுள்ளார். தினத்தந்தி Related Tags : மத்திய … Read more

ஏமன் கடற்கரை அருகே செங்கடலில் சென்ற கப்பல் மீது தாக்குதல்

சனா, ஏமன் நாட்டில் இயங்கி வரும் ஹவுதி அமைப்பினர், காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏமன் கடற்கரை அருகே செங்கடலில் சென்ற கப்பல் மீது தாக்குதல் … Read more