சென்னை, தஞ்சை, திருச்சியில் 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: “சென்னை, தஞ்சாவூர், திருச்சியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் 6,746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.1,146 கோடி மதிப்பில், மறு கட்டுமானம் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து அவர் சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கை: “மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைமக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழச் சிறந்த பல திட்டங்களை உருவாக்கி வருகிறது. … Read more

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்

ராஞ்சி: நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 31-ம் தேதி முதல்வர் பொறுப்பை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்த பிறகு அவரை இந்த வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்தது. அவர் நீதிமன்ற காவலில் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பானு பிரதாப் பிரசாத், முகமது சதாம் உசேன் … Read more

டிசம்பருக்குள் மருத்துவத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர்

சென்னை தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவத்துறை பணியிடங்கள் வரும் டிசம்பருக்குள் நிரப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இன்று தமிழக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொள்கை விளக்கக் குறிப்பை தாக்கல் செய்தார். அந்த விளக்கக் குறிப்பில். ”உதவி மருத்துவர் (பொது) பதவியில் உள்ள 2,553 பணியிடங்கள், உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) பதவியில் உள்ள 26 பணியிடங்கள், மருந்தாளுநர் பதவியில் உள்ள 425 இடங்கள், கிராம சுகாதார செவிலியர்/தாய்மை துணை செவிலியர் … Read more

Indian 2 movie: சர்வதேச அளவில் நடக்கும் இந்தியன் 2 பிரமோஷன்கள்.. மலேசியாவில் கமல் & டீம்!

 சென்னை: நடிகர் கமல்ஹாசன் வில்லனாக மிரட்டியுள்ள கல்கி 2898 ஏடி படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி ரிலீசாகவுள்ளது. சில தினங்கள் இடைவெளியில் கமலின் அடுத்தடுத்த படங்கள் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது அவரது ரசிகர்களை

பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது… 9 நாட்களில் 5-வது சம்பவம்

பாட்னா, பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ரூ.3 கோடி செலவில் கட்டப்படும் இந்தப் பாலம் 2021ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வருகிறது. பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறையால் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. பீகாரில் தொடர்ச்சியாக பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் கடந்த ஒன்பது … Read more

ஊட்டி, கொடைக்கானலுக்கான இ-பாஸ் நடைமுறையை செப்.30 வரை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லாம் என்பது குறித்து கணக்கெடுப்பு நடந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இ-பாஸ் வழங்கும் நடைமுறையை வரும் செப்டம்பர் 30 வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது … Read more

‘மைக் அணைப்பு’ சர்ச்சை: எதிர்க்கட்சிகளின் ‘நீட்’ எதிர்ப்புக் குரலால் முடங்கிய மக்களவை!

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, நாடாளுமன்றத்தில் ‘மைக் அணைப்பு’ சர்ச்சை வலுத்துள்ளது. நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் நேற்று இண்டியா கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் முடிவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணி சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, … Read more

பதவி ஏற்கும் பரணி! பக்கவாத நாடகத்தால் எதுவும் செய்யமுடியாமல் தவிக்கும் செளந்தரபாண்டி!

Anna Today’s Episode Update: பதவி ஏற்ற பரணி.. சௌந்தரபாண்டி ட்விஸ்ட் கொடுத்த ஷண்முகம், நடந்தது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்… 

காங்கிரஸ் பெண் எம் பி மாநிலங்களவையில் மயக்கம்

டெல்லி இன்று நாடாளுமன்ற மாநிலக்களவையில் காங்கிரஸ் எம் பி புலோ தேவ் நேதம் மயங்கி விழுந்துள்ளார். தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று ஜனாதிபதியின் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால் அதற்கு முன்பாக நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. புலோ தேவி நேதம்,அப்போது மயங்கி … Read more

சிக்குனு சிறுத்த இடைக்கு இதை செய்தா போதும்.. ரம்யா பாண்டியனின் முரட்டு வொர்க் அவுட்!

  சென்னை: மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். பட வாய்ப்பு இல்லை என்றாலும், இணையத்தில் தன்னை நம்பி இருக்கும் ரசிகர்களுக்காக விதவிதமான போட்டோவை ஷேர் செய்து எப்போதும் அவர்களை மிகிழ்ச்சியுடனே வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ டிரெண்டாகி வருகிறது. எப்போதும் லைம் லைட்டில் இருந்து