மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் பனிப்போர்: நெல்லை மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தை நடத்த போதிய கவுன்சிலர்கள் வரவில்லை என்பதால் தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்று அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். திருநெல்வேலி மாநகராட்சியில் பலகோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்துக்கான அஜெண்டா மாநகராட்சியில் உள்ள 55 கவுன்சிலர்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. … Read more

விற்பனைக்கு வந்த இந்திய புலம்பெயர் தொழிலாளர்களின் தரவுகள்: ஹேக்கர்கள் கைவரிசை

சென்னை: இந்தியாவில் இருந்து வேலை நிமித்தமாக அயல் நாடுகளில் புலம்பெயர்ந்து பணியாற்றி வரும் தொழிலாளர்களின் தனிப்பட்ட தரவு சார்ந்த தளத்துக்கான அக்சஸ் தங்கள் வசம் இருப்பதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். இது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அரசு தளம் என தகவல். இதனை அவர்கள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது கசிந்துள்ள தரவுகள் இது eMigrate போர்ட்டல் தொடர்புடைய விவரங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்தி தொழிலாளர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், பிறந்த … Read more

நினைத்தேன் வந்தாய்: செல்வியின் கழுத்தை நெரித்த மனோகரி.. வலை வீசி தேடும் ரவுடிகள்

Ninaithen Vandhai Today’s Episode Update:  ஒரே கேள்வி.. செல்வியின் கழுத்தை நெரித்த மனோகரி.. வலை வீசி தேடும் ரவுடிகள் – நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நீட் தேர்வு மற்றும் வினாத் தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் | பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என்று இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்திய நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “நீட் தேர்வு மற்றும் கேள்வித் தாள் கசிவு விவகாரம் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த விரும்புகின்றன. இன்று … Read more

மனைவி ஆர்த்தியை நிஜமாகவே பிரிகிறாரா ஜெயம் ரவி?.. ஆர்ஜே ஷா என்ன சொல்றாரு பாருங்க!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி பிரியப் போவதாக திடீரென சினிமா வட்டாரத்தில் பரபரப்பான பேச்சுவார்த்தைகள் கிளம்பி வரும் நிலையில், பலரும் பல விதமாக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவியின் பிரச்சனைகள் குறித்தும் அவர்கள் கண்டிப்பாக விவாகரத்து செய்யப் போவது உறுதி என்றெல்லாம் பேசி வருகின்றனர். இந்நிலையில், ஷாபூத்ரி யூடியூப் சேனலில் பேசி

Maldives: அதிபருக்கு பில்லி, சூனியம் வைத்த அமைச்சர்? – கைதுசெய்த போலீஸ் – மாலத்தீவில் பரபரப்பு!

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கு எதிராக பில்லி, சூனியம் வைத்த சந்தேகத்தின்பேரில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. முன்னதாக, மாலத்தீவு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் ஃபாத்திமா ஷம்மாஸ், அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம் வைத்ததாக, அவரின் வீட்டில் சந்தேகத்தின் பேரில் போலீஸார் சோதனை நடத்தினர். மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சோதனையின் இறுதியில் பில்லி, சூனியம் வைத்தது தொடர்பாக பல்வேறு பொருள்கள் அமைச்சரின் வீட்டில் கிடைத்ததாக, ஃபாத்திமாவை … Read more

“தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்க” – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் தொடர்ச்சியான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதோடு, தேசிய அளவில் இந்தத் தேர்வு முறையை ரத்து செய்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர … Read more

ஆளுநர் vs சபாநாயகர்: மேற்கு வங்கத்தில் எம்எல்ஏ-க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் அதிகாரம் யாருக்கு?

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளுநர் மற்றும் சபாநாயகர் இடையேயான மோதலால் இடைத்தேர்தலில் வென்ற இருவர் எம்எல்ஏ-வாக பதவியேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக இருந்த இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராயத் உசேன், சயாந்திகா பந்தோபாதியா ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து அவர்கள் எம்எல்ஏ-வாக பதவியேற்க அழைப்புக்கு காத்திருந்தனர். இந்த நிலையில் எம்எல்ஏ-வாக பதவிப் பிரமாணம் செய்துவைப்பதில் மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் … Read more

ரஜினியின் ‘வேட்டையன்’ படத்துடன் மோதும் இன்னொரு பெரிய படம்! எது தெரியுமா?

நடிகர் ரஜினி நடித்து முடித்திருக்கும் வேட்டையன் திரைப்படத்திற்கு போட்டியாக இன்னொரு படமும் இறங்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.   

ஹரியானா அரசுப் பள்ளிகளில் போலியாக 4 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு… சிபிஐ விசாரணைக்கு உத்தரவு…

ஹரியானா அரசுப் பள்ளிகளில் போலியாக 4 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2014 – 2016ம் ஆண்டுக்கு இடையே போலியாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் தரவு மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுப் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐ-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட், நெட் கேள்வித் தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஹரியானா அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பெயரில் நடைபெற்றிருக்கும் இந்த … Read more