150சிசி பிரிவில் அதிகம் விற்பனை ஆகின்ற டாப் 5 பைக்குகள் மே 2024

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 150-155சிசி விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களில் மிகவும் பிரசத்தி பெற்ற பல்சர் 150 மற்றும் N150 என இரண்டும் சுமார் 29,386 யூனிட்டுகளை பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, யமஹாவின் நேக்டூ ஸ்டைல் பெற்ற எம்டி-15 ஆனது 14,612 மற்றும் 149சிசி என்ஜின் பெற்ற FZ சீரிஸ் விற்பனை எண்ணிக்கை 14,359 ஆகவும், பிரபலமான ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்ற ஃபேரிங் ரக யமஹா ஆர்15 விற்பனை 10,435 ஆக உள்ளது. மேலும் இந்த … Read more

செயற்கை கோள்களின் ‘கல்லறை’… காலவதியான செயற்கை கோள்கள் எவ்வாறு அழிக்கப்படுகின்றன..!!

பூமியின் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் சுமார் 10 ஆயிரம் செயற்கைக்கோள்கள் செயல்படுகின்றன. அனைத்து செயற்கைக்கோள்களும் ஒரு நாள் அல்லது மற்றொரு நாள், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வேலை செய்வதை நிறுத்திவிடும்.

`ஆளுநரா… சபாநாயகரா… பதவி பிரமாணம் செய்துவைப்பது யார்?’ – போராடும் 2 MLA-க்கள் | பின்னணி என்ன?!

மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் காலியாக இருந்த இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராயத் உசேன், சயாந்திகா பந்தோபாதியா ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள் இருவரும் இன்னும் எம்.எல்.ஏவாக பதவியேற்கவில்லை. இவ்விவகாரத்தில் ஆளுநர் ஆனந்தாபோஸ் மற்றும் மாநில சபாநாயகர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க எனக்குத்தான் அதிகாரம் இருப்பதாக ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்ட இருவரும் ராஜ்பவனுக்கு வந்து பதவியேற்றுக்கொள்ளும்படி நேற்று முன் … Read more

விக்கிரவாண்டியில் வேட்புமனு நிராகரிப்பு: முறையிட்டவரின் மனுவை ஏற்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தனது வேட்புமனுவை ஏற்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர் விடுத்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஜூன் 14-ம் தேதி துவங்கிய வேட்புமனுத் தாக்கல் 21-ம் தேதி முடிவடைந்தது. இந்த தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த சிவகங்கையைச் சேர்ந்த … Read more

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்‍பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்துவருகிறது. குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி, வீராஜ்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இன்று … Read more

கார்த்திகை தீபம் அப்டேட்: போலி சாமியார் சொன்ன பரிகாரம்.. உயிருக்கு வர போகும் ஆபத்து என்ன?

Karthigai Deepam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

சோரியாசிஸ் நோய்: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் சாதனை

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தோல் நோய் பிரிவில் சோரியாசிஸ் நோய்க்கு ஜப்பான் நாட்டில் இருந்து நியூ ரீபிக்ஸ் பீட்டா குளுக்கான் என்ற எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மருந்தை வரவழைத்து இரண்டு நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை செய்ததில் முழுவதுமாக சோரியாஸ் நோயிலிருந்து தீர்வு கண்டு சாதனை.  

டி20 உலகக்கோப்பை : ஆஸி, இங்கிலாந்து செஞ்ச தப்ப தென்னாப்பிரிக்காவும் செஞ்சா கப்பு இந்தியாவுக்கு தான்

டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி சனிக்கிழமை பர்படாஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று 2வது முறை டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய அணியும், ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கும் தென்னாப்பிரிக்க அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பிலும் இருக்கின்றன. இரு அணிகளும் நடப்பு உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் … Read more

Sardar 2: இரண்டு படங்கள் ரிலிஸுக்கு ரெடி, அடுத்த மாதம் முதல் `சர்தார் 2'; நாயகி இவர்தான்!

கார்த்தியின் கரியரில் எப்போதும் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் ரெடியாக இருந்ததில்லை. இப்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியானதில் சந்தோஷத்தில் இருக்கிறார். அதில் பிரேம்குமார் இயக்கிய ‘மெய்யழகன்’ படத்தின் டீசரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் கார்த்தியின் ரசிகர்கள். நலன் குமாரசாமி இயக்கிய ‘வா வாத்தியார்’ ஷூட்டிங்கும் முடிவடைந்துவிட்டதால், மூன்றாவது படமாக ‘சர்தார் 2’ தொடங்குகிறது. கார்த்தியின் நெருங்கிய நண்பரான லக்‌ஷ்மண் குமார் முதல் பாகத்தைத் தயாரித்திருந்தார். இப்போது பார்ட் 2வையும் அவரே தயாரிக்கிறார். கார்த்தி ‘இரும்புத்திரை’, … Read more

ஜியோ 2 பிளான்களை அதிரடியாக நீக்கியது! கல்யாணத்த வச்சு கழுத்தறுத்த அம்பானி

லோக்சபா தேர்தல் 2024 முன்பே, ரீச்சார்ஜ் பிளான்களின் விலை எல்லாம் உயரப்போகுது என்ற செய்தி வெளியானது. அது தற்போது உண்மையாகியுள்ளது. ஜியோ, ஏர்டெல் இரண்டு நிறுவனங்களும் தங்களின் அனைத்து ரீச்சார்ஜ் பிளான்களின் விலையையும் உயர்த்தியுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு இடியாக அமைந்த செய்தியாக அமைந்திருக்கிறது. மெதுமெதுவாக விலைகளை எல்லாம் ஏற்றிக் கொண்டிருந்த ஜியோ, இந்த முறை ஒரே அடியாக 22 விழுக்காடு வரை பிளான்களின் விலையை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.  அத்துடன் ஜியோவின் ரூ.395 மற்றும் ரூ.1559 … Read more