தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட மேலும் 4 புதிய மாநகராட்சிகள் உதயம்! சட்டசபையில் மசோதா தாக்கல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிதாக 4 மாநராட்சிகள் உருவாக்குவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளை தரம் உயர்த்துவது குறித்து சட்டசபையில் எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதேபோல் பல்வேறு நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் விரைவில் நகராட்சி, மாநகராட்சி தரம் உயர்த்துதல் தொடர்பாக … Read more

TVK Vijay: விஜய் மேடையில் எமோஷன் ஆன டீச்சர்! பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்! கொஞ்சம் ஓவரா போராறோ?

சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னரே தனது ரசிகர் நற்பணி மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு 10 மற்றும் 12வது பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை,   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சட்டமன்றங்கள் வாரியாக நேரில் அழைத்து கல்வி ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

இரண்டு புதிய நிறங்களை XUV700 காரில் வெளியிட்ட மஹிந்திரா

2 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த XUV700 எஸ்யூவி மாடலின் வெற்றியை கொண்டாடும் வகையில் பர்ன்ட் சியன்னா மற்றும் டீப் ஃபாரஸ்ட் என இரண்டு புதிய நிறங்களை பெற்றதாக விற்பனைக்கு மஹிந்திரா வெளியிட்டுள்ளது. மஹிந்திராவின் XUV700 எஸ்யூவி வெளியிடப்பட்ட 33 மாதங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் பிரான்ஸ் எடிசன், AX5 Select வேரியண்ட் என இரண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. எக்ஸ்யூவி700 காரில் 197hp பவர் மற்றும் 380 Nm டார்க் … Read more

கிளிநொச்சியில் தேசிய கபடி சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆரம்பம்

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடாத்தும் 48வது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான தேசிய கபடி சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று (28) கிளிநொச்சியில் ஆரம்பமாகியது. குறித்த போட்டித் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 8.00மணிக்கு கிளிநொச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள வட மாகாண உள்ளக விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகின. இதன்போது விருந்தினர்கள், மேற்கத்தேய இசை முழங்க அழைத்துவரப்பட்டு, தேசியக் கொடி, மாகாண கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு.. என்ன வித்தியாசம், யார் நடத்துவது?

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் தரவுகளை வெளியிட்டதுடன், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., இ.பி.சி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவிகிதத்திலிருந்து 65 சதவிகிதமாக அதிகரித்ததது. அதைத் தொடர்ந்து, சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த விவாதம் தேசிய அளவில் எழுந்தது. நிதிஷ் குமார் பீகாரைப் போலவே தமிழ்நாட்டிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பை தி.மு.க அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையை சில அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் முன்வைத்தனர். இந்த விவகாரத்தில் பாட்னா உயர் நீதிமன்றத்தில் … Read more

“மோடியை பிரதமர் பதவியில் இருந்து தூக்குவதே இந்தியாவுக்கு நன்மை பயக்கும்” – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 

சென்னை: “பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு நன்மை பயக்கும்,” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், “தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் நீட் தேர்வு ரத்து குறித்த தனி தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானம் தவறானது; ஒருபோதும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் … Read more

கர்நாடகா | சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரியில் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பலியானவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் உள்ள பத்ராவதி தாலுகாவில் உள்ள எம்மேஹட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் ஆதர்ஷ் (23) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு டெம்போ டிராவலர் ஒன்றை வாங்கியுள்ளார். இதனையடுத்து கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள சவதாட்டி … Read more

பணவீக்கம் முதல் வெளியுறவுக் கொள்கை வரை: பைடன் vs ட்ரம்ப் காரசார விவாதம்

அட்லாண்டா: வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. வெள்ளை மாளிகையில் மீண்டும் அதிபர் அரியணையை அலங்கரிக்க ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் இன்று (வெள்ளிக்கிழமை) இருவரும் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு பேசினர். இதுதான் அதிபர் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு நடைபெறும் முதல் விவாத நிகழ்வு. இதனை சிஎன்என் ஊடக நிறுவனம் ஒருங்கிணைத்தது. இதில் … Read more

இன்னும் ஓடிடியில் வெளியாகாத 150 கோடி வசூலித்த படம்! எது தெரியுமா?

150 கோடி வசூல் செய்த ஒரு திரைப்படம் இன்னும் ஓடிடியில் வெளியாகாமல் இருக்கிறது. அது எந்த படம் தெரியுமா?

பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடியை சீக்கிரம் தூக்கியாகணும் – ஈவிகேஎஸ் பரபரப்பு பேட்டி

பிரதமர் மோடியை  எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.