வார கடைசி நாட்கள், பள்ளிகள் திறப்பு: சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

சென்னை: பள்ளிகள் திறப்பு, வார இறுதிநாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பின்படி வரும் 10-ம் தேதி (திங்கள்) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து சென்னை திரும்புவதற்கு ஏற்ப வரும் 9-ம் தேதி 705 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதேநேரம், வரும் … Read more

உத்தராகண்ட் மாநிலத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 5 பேர் உயிரிழப்பு: 4 பேரை தேடும் பணி தீவிரம்

டேராடூன்: உத்தராகண்டில் மலையேற்றத் தில் ஈடுபட்ட 22 பேரில் 13 பேர் உயிரிடனும் 4 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேரை மீட்புக் குழு தேடி வருகிறது. உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் சஹஸ்த்ரா தல் மலைப்பகுதி உள்ளது. சுமார் 4,400 மீட்டர் உயரம் கொண்ட இதில் மலையேற்ற வீரர்கள் அவ்வப்போது ஏறுவது வழக்கம். அந்த வகையில், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் உள்ளூர் வழிகாட்டிகள் என மொத்தம் 22 பேர் அடங்கிய குழுவினர் … Read more

INDIA Bloc Meeting : ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன? முக்கிய சந்திப்பில் பங்கேற்காத 2 தலைவர்கள்!

INDIA Bloc Meeting : நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கு நடந்து முடிந்ததை ஒட்டி, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில், 2 தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.  

Chennai Weather : சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பிருக்கிறதா? வானிலை ஆய்வு மையம் தகவல்!

Latest News Chennai Weather : கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து மழை பெய்து வருகிறது.

இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் விவரம்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ள தமிழக மாவட்டங்கைன் விவரங்களை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும்  நாளையும்  தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக … Read more

தினமும் மாலையில் சிவன் – சக்தி தரிசனம்; பக்தர்களுக்கு கலர்ஸ் தமிழ் சீரியல் ட்ரீட்!

சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் குடும்ப நெடுந்தொடர்களுக்கு எப்படி ஒரு நல்ல வரவேற்பு எப்போதும் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றதோ, அதேபோல், கடவுள் தொடர்பான, புராணங்கள் தொடர்பான நெடுந்தொடர்களுக்கும் மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்துள்ளது மட்டும் இல்லாமல், டி.ஆர்.பி-யை எகிற வைத்துள்ளனர். இதனால்தான் ராமாயணம், மகாபாரதம், திருவிளையாடல் ஆகியவையும், அம்மன் தொடர்பான நெடுந்தொடர்களும், நாக தெய்வங்கள் தொடர்பான

டெல்லியில் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

புதுடெல்லி, நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகள் மொத்தம் 52 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜனதா கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; போபண்ணா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லே – ஜோரன் விலீஜென் இணையுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட போபண்ணா இணை 7-6 (7-3), 5-7, … Read more

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு ஜோ பைடன், புதின், ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து

வாஷிங்டன், நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளையும் சேராத கட்சிகள் 17 இடங்களை பிடித்துள்ளன. பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், வருகிற 8-ந்தேதி மோடி 3-வது முறையாக … Read more

வேட்பாளர் பட்டியல், சின்னம் குறித்து பத்திரிகை விளம்பரம் வெளியிடக் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவு

சென்னை: தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் குறித்த பட்டியல், சின்னம் போன்ற விவரங்களை பத்திரிகைகளில் விரிவான விளம்பரமாக வெளியிடக் கோரிய மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட பொன்குமரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்படவில்லை. வேட்பாளர்கள் சமமாக நடத்தப்படவில்லை. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை … Read more